சுகாதர வசதியின்றி பாதிக்கபடுவதாக உடலில் கொசு வலை போர்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுகாதார வசதியின்றி பாதிக்கபட்டு வருவதாகக் கூறி தமிழ் புலிகள் கட்சியினர் இன்று உடலில் கொசு வலை போர்தியபடி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை மாநகராட்சி 16-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் 350-ம் மேற்பட்ட குடும்பங்களாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் தொடர்ந்து மறுக்கபட்டு வருவதாக இன்று தமிழ் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டி உள்ளனர். 

இது குறித்து தமிர் புலிகள் அமைப்பினர் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள பொது கழிப்பிட செப்டிக் டேங் நிரம்பி வழிந்து வீதிகளில் ஓடுகிறது. இது குறித்து புகார் அளித்தும் கடந்த 4 மாதங்களாக மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. 

மேலும், வீதிமுழுவதும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தால் அலட்சிய போக்குடன் நடந்து கொள்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே, ஆட்சியரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உடலில் கொ வலையினை போர்த்தியபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளோம்' என தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...