'நோ பார்க்கிங்'-ல் நின்ற போலீஸ் வண்டிக்கு பூட்டு


கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அத்தகைய இடங்களை கண்டறிந்து போக்குவரத்து போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பை மீறி அந்த இடங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வோரிடம் போலீசார் அபராதம் விதித்து வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.



இந்தநிலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்ட இடத்தில் நின்ற போலீசாரின் வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறையினர் பூட்டு போட்ட சம்பவம் கோவையில் நடந்துள்ளது.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்புறம் கோவை மாநகர போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்' பலகை வைத்துள்ளனர். ஆனால், இன்று அப்பகுதிக்கு வந்த காவல்துறை வாகனம் ஒன்று அறிவிப்பு பலகைக்கு முன்புறமே வாகனங்களை நிறுத்திச் சென்றனர். அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார் 'நோ பார்க்கிங்'-கில் நின்ற கார்களின் சக்கரங்களுக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து, அருகில் நின்ற போலீசாரின் வாகனத்தின் சக்கரங்களுக்கும் பூட்டு போட்டுச்சென்றனர். ஆனால், பூட்டிய சில நிமிடங்களிலேயே அந்த பூட்டு அகற்றப்பட்டது.



'நோ பார்க்கிங்'-யில் நின்ற வாகனம் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சொந்தமான வாகனம் என்று கூறப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...