கோவையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 20 ரூபாய் நோட்டு வழங்கிய ஏடிஎம்


கோவையில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் 2000ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை காளிதாஸ் தனது மருத்துவ செலவுக்காக சவுரிபாளையம் பகுதியில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்றார்.

50 ஆயிரம் ரூபாயை 5 தவணைகளாக எடுக்க முயற்சித்த அவர் 10ஆயிரம் ரூபாயாக எடுத்தார். ஒவ்வொரு முறையும் நான்கு 2000ம் ரூபாய் நோட்டுகளும் ஒரு 20 ரூபாய் நோட்டும் வந்தது.



இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மனமுடைந்த அவர் மருத்துவ செலவுக்கு அவசரமாக தேவைப்படும் பணம் கிடைக்க தாமதமானதற்கு வங்கி அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

வங்கி ஏடிஎம்-ல் 2000-ம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்தது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...