மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை: உழவே தலை கருத்தரங்கில் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

கோவை கொடிசியா வளாகத்தில் 'அக்ரி இன்டெக் 2017' என்ற வேளாண் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கண்காட்சியின் பகுதியாக 'உழவே தலை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் கொடிசியா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் பாரதிய வித்யா பள்ளியின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், இயற்கை விவசாய அறிஞர்கள் 16 பேர் கலந்து கொண்டு கருத்தரங்கை நடத்தினர். 



முன்னதாக கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:- 

சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த காலகட்டத்தில் நாம் நிறைய சாதித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அனைத்து வளங்களும் நம்மிடம் இருந்தும் இந்த தொய்வுக்கு காரணம் மக்களின் பங்களிப்பு இல்லாமல் போனதே காரணம். இவ்வளவு பெரிய தேசத்தை ஒரு அரசியல் கட்சியோ அல்லது முதல் அமைச்சரோ மட்டும் கவனித்துக் கொள்ள முடியாது. 

மக்கள் ஆக்கப்பூர்வமாக செயல் பட்டு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை சதவிகிதம் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் மீதான மக்களின் அலட்சியம் மற்றும் அறியாமை நீங்கும் போது தான் பின்னடைவு நீங்கும். உழவே தலை என்ற இந்த கருத்தரங்கிற்கு அதிகமான இளைஞர்கள் வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. பிரச்சனைகள் மீது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்துவிட்டது. ஆனால் பொறுப்புணர்ச்சி வரவில்லை. இயற்கையை கெடுப்பது, விவசாயத்தை புறக்கணிப்பது விவசாயத்தின் மீது எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவைகள் தவிர்க்கப்பட்டு, இளைஞர்களை விவசாயத்திற்குள் புகுத்திட வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். 



இக்கருத்தரங்கில் இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் வனிதா மோகன், சித்த மருத்துவர் சிவராம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...