கோவையிலிருந்து கொழும்பு வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான போக்குவரத்து சேவை துவக்கம்


ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், கோவையிலிருந்து கொழும்பு வரை வாரத்தில் நான்கு நாட்கள் என கோவையில் விமான போக்குவரத்து சேவை துவங்கியுள்ளது. இந்தியாவில் 14வது நகரமாகவும், தென்மாநிலங்களில் உள்ள மூன்று நகரங்களில் கோவையிலும் இச்சேவை துவங்கியுள்ளது. இந்த வாரத்தில் விசாகபட்டினத்திலிருந்து ஜூலை 8ம் தேதியிலும், ஹைதரபாத்திலிருந்து ஜூலை 12ல் இருந்தும் துவங்கியுள்ளன. இதனுடன் இந்தியாவில் 14 நகரங்களுக்கு 126 விமானங்களை இயக்குகிறது. இதில் சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, புதுதில்லி, கயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு முன்னதாகவே சேவையைக் கொண்டுள்ளது. 



இது குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி சிவா ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டின் அடுத்த துடிப்பான நகரமாக திகழும் கோவைக்கு எங்களது சேவையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களது வீட்டு வாசலிலிருந்து உலகத்தில் பல நாடுகள், நகரங்களுடன் தொடராக செல்ல, எளிய முறை பயணமாக இது அமையும். இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை வலுப்படுதவும், வர்த்தகத்தையும், சுற்றுலா, ஆன்மீக பயணம், உடல் நலம் மற்றும் கல்வி போன்றவற்றை மேம்படுத்தவும் இது பயனுள்ளதாக அமையும். 

இந்த விமான சேவை துவக்கத்துக்குபின், வர்த்தக சமுதாயத்தினரும், இந்தியாவின் தொழில் நகரமாக திகழும் கோவையின் ஜவுளி, பொறியியல், வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், உற்பத்தி என பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமையும். இந்த விமான பயணம் செய்வோர் விருது பெற்ற இலங்கையின் விருந்தோம்பலை அனுபவிக்க முடியும். ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் புதிய ஏ321நியோ விமானங்கள் தென்னிந்தியாவுடன் இணைகிறது என்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.



விமானப் பயண நேரம்:

கொழும்பு - கோவை புறப்படும் நேரம்: 1:30 மதியம் சென்றடையும் நேரம்: 2:35.

கோவை - கொழும்பு புறப்படும் நேரம்: 3:35 மதியம் சென்றடையும் நேரம்: 4:45.

இயங்கும் நாட்கள்: செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...