போத்தனூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி விவசாயிகள் மாட்டுவண்டியுடன் வந்து மனு

கோவை, போத்தனூர் வழியாக தென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்கக் கோரி விவசாயிகள் மாட்டுவண்டியுடன் வந்து போத்தனூர் ரயில்வே அதிகாரியிடம் மனு அளித்தனர்.



கோவை போத்தனூர் வழியாக கடந்த 9 ஆண்டுக்கு முன்பு வரை தென் மாவட்டங்களுக்கு 7 ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. அகல ரயில் பாதை சேவை தொடங்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு அதன்படி ரூபாய் 350 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டது.



தற்போது பணிகள் முடிவடைந்து போத்தனூர் பொள்ளாச்சி இடையே ரயில் சேவை கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்நிலையில் கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்கள் மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், போத்தனூர் பொள்ளாச்சி இடையே இயக்கப்படும் ரயில் நேரம் காலை மற்றும் மாலையில் இயக்கக்கோரி கட்சி சார்பற்ற விவசாய சங்கம், கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம், சிட்டிசன் வாய்ஸ் கிளப், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக மத்திய ராயில்வேத்துறை அமைச்சர் சுரேஷ் பாபு அவர்களுக்கு கோவை போத்தனூர் ரயில் நிலைய அலுவலர் மூலமாக கவன ஈர்ப்பு கோரிக்கை மனு அளித்தனர். 



இது குறித்து கட்சி சார்பற்ற விவசாய சங்க செயலாளர் கந்தசாமி கூறுகையில், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்வரை தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவை இருந்ததாகவும் ஆனால் தற்போது அகல ரயில் பாதை திட்டம் தொடங்கபட்ட பின்பும் தென்மாவட்டங்களான திண்டுக்கல் மதுரை இராமேசுவரம், நெல்லை தூத்துக்குடி போன்ற மாவட்டங்களுக்கு இராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்க வேண்டும் எனவும் அப்படி தொடங்கும் பட்சத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால் மாட்டுவண்டிகள் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.



மேலும் போத்தனூர் பொள்ளாச்சி அகல ரயில் பாதை அமைப்பதில் முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருப்பதாகவும், ரயில் பாதையில் 60 அடி ஆழத்தில் ரயில் பாதை அமைத்திருப்பதால் பாறைகள் விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெர்வித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...