அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு வரும் 10-ம் தேதி துவக்கம்

தமிழ்நாடு அறுவை சிகிச்சை மருத்துவர்களின் 41-வது மாநாடு முதன் முறையாக கோவை அரசு மருத்துவமனையால் நடத்தப்பட உள்ளது. 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கடந்த 1998-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் 41-வது மாநாடு கோவை அரசு மருத்துவமனைக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புற்றுநோய் மையத்தின் தலைவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மாநாடு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்று 14-ம் தேதி நிறைவடைகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 600 மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டின் மூலம், இளம் மருத்துவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் உள்ள தயக்கங்களை களைவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும். போதுமான மருத்துவர்கள் இருந்தும் அவர்கள் பணியினை முழுமையாக செய்ய போதுமான தொழில் நுட்ப வசதிகள் இல்லாமல் இருக்கிறது. இதனை சரி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...