சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான கூட்டு பண்ணை திட்டத்திற்கான குழு அமைக்கப்படும்- மாவட்ட ஆட்சியர்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான 2017-18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணைய திட்டத்திற்கான குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.

2017- 18-ம் ஆண்டில் தமிழகத்தில் கூட்டு பண்ணையம் செயல்படுத்திட தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டு பண்ணையம் திட்டத்தில், 20 நபர் கொண்ட, சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைந்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும். ஐந்து விவசாய ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு விவசாய உற்பத்திக்குழு ஆரம்பிக்கப்படும்.

வணிக வசதியுடன் கூடிய இக்கூட்டு பண்ணைய முறையில், ஒருங்கிணைந்த பரப்பில் ஒரே பயிரினை உற்பத்தி செய்து, நீடித்த லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கலப்பு பண்ணையம், மதிப்பு கூட்டிய வேளாண்பொருட்கள் உற்பத்தி செய்தல் மற்றும் குழுவினரே தொழில் முனைவோராக தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறு, குறு விவசாயிகள் அடங்கிய உற்பத்திகுழுக்கள், தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளவும், உயரிய வேளாண்மைத்துறை தொழில்நுட்பங்கள் மூலம் விளைச்சலை பெருக்கவும், அரசுத்துறை அலுவலர்கள் உதவுவர்.

உற்பத்தி குழுக்கள் துவங்கும் போது, ஒரு குழுவுக்கு தலா, ஐந்து லட்சம் ரூபாய் இருப்பு நிதி (கார்பஸ் நிதி) மூன்று கட்டமாக பரித்து வழங்கப்படும். குழுக்கள், கூட்டுறவு சங்கமாக பதிவு செய்யப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தில், 130 விவசாய ஆர்வலர் குழுக்கள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2600 விவசாயிகள் கூட்டு பண்ணையம் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்டட உள்ளனர். தலா 5 ஆர்வலர் குழுக்கள் ஒருங்கிணைந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 26 விவசாய உற்பத்தி குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இருப்பு நிதியாக மொத்தம் ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

வேளாண்துறையுடன் தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை இணைந்து இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை அணுகவும். இத்திட்டம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்களின் ஆலோசனைப்பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...