பிளாஸ்டிக் கழிவுகள் மீதான ஜிஎஸ்டி வரியை இரத்து செய்யக் கோரி பிளாஸ்டிக் தொழிற்கூடங்கள் வேலை நிறுத்தம்

மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசால் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து கோவை நெகிழி மறுசுழற்சி, பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் விற்பனையாளர் சங்க கூட்டமைப்பு இணைந்து இன்று கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.



உபயோகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் 18 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பில் VERGIN GRANULES மற்றும் PR-GRANULES இரண்டும் 18 சதவிகிதம் வரிவிதிப்புக்குள்ளாகிறது. PR-GRANULES 5 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இலாப நோக்கத்தின் அடிப்படையில் சந்தைப் பொருள் உற்பத்தியாளரும் PR-GRANULES-க்கு பதிலாக VERGIN GRANULES வாங்க விரும்புவதினால், பழைய பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலானது மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது.



இதனால், மறுசுழற்சி வணிகத்தை சார்ந்துள்ள தொழிற்கூடங்களும் முடங்கும் அபாயம் மற்றும் வேறு தொழிலை நோக்கி செல்லும் நிலைமை உருவாகும். இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணி இழப்பும் ஏற்படும். இந்த தொழில்களில் 70 சதவிகிதம் பேர் பெண் தொழிலாளர்களாக உள்ளனர். மறுசுழற்சிக்கு உபயோகப்படுத்தும் மூலப் பொருளானது மறைமுக தொழிலாளர்களான குப்பை பொறுக்கி தருபவர்கள் மற்றும் வீடுங்களில் இருந்து பயனற்ற நெகிழி கழிவுகளை சேகரித்து தருபவர்களிடம் மட்டுமே பெறப்படுகிறது. தொழில் போட்டிகளில் தங்களை தக்க வைத்துக் கொள்ள முயலும் மறுசுழற்சியாளரும் இவ்வாறு பெறப்படும் மூலப் பொருட்களின் விலையை குறைக்க நேரிடும். இதன் காரணமாக இத்தொழிலை சார்ந்துள்ள பல லட்சம் தொழிலாளர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுகின்றனர்.

மேலும், இதன் மூலம் மத்திய அரசு அறிவித்த தூய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகும். ஆகையால், இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பழைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 18 சதவிகிதம் வரியிலிருந்து 5 சதவிகிதம் வரிவிதித்தும் மறுசுழற்சியாளர்களை ஊக்கப்படுத்தி தொழிலை அழியும் அபாயத்திலிருந்து காக்க வேண்டும் என்பதற்காக இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...