நாடு முழுவதும் கலைகட்டிய விநாயகர் சதுர்த்தி- கோவில்களில் சிறப்பு பூஜை

தேசிய அளவில் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபாடும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கோவையில் விநாயகருக்கு என பிரசிதிபெற்ற ஈச்சனாரி மற்றும் புளியகுளம் விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி சிறப்பு தரிசனத்தை கண்டு வழிபட்டு வருகின்றனர். 



மேலும், விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படும் அரிசி மாவு மூலம் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளும், எருக்கம் பூவினாலான மாலையும் அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.



இதில் குறிப்பாக, வழக்கம்போல் இரசாயன பூச்சுக்களாலும், பிளாஸ்டிக் கலவையினாலும் செய்யப்பட்ட விநாயகர் சிலை அல்லாமல் இயற்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளே கோவை மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ளன.



மேலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் வெற்றியைக் குறிக்கும் வகையில் 'ஜல்லிக்கட்டு விநாயகர்' சிலை தயாரிக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.



விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினரால் பெரும்பாலான பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் வரும் ஆகஸ்ட் 27 அன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்க திட்டமிடப்பட்டுள்ளன.



Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...