நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முற்றுகை



அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கோவையில் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், ஐந்தாவது நாளாக (நேற்று) தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யா வலியுறுத்தியும் முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். 



இதைத்தொடர்ந்து,  எஸ்.டி.பி.ஐ கட்சி தொண்டமுத்தூர் தொகுதி தலைவர் பீர் முஹமது தலைமையில் குனியமுத்தூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில், தொண்டமுத்தூர் தொகுதி செயலாளர் ஷானவாஸ், எஸ்.டி.பி.ஐ கட்சி செயல்வீரர்கள் அன்சர் செரீப், அப்துல் ரஹிம், கரீம், முஸ்தபா, அஷ்ரப், அமீர் ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், முற்றுகை போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 43 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...