பள்ளி சென்ற சிறுமிகள் மாயம்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்


கோவை துடியலூரை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இரு சிறுமிகள் வழக்கம் போல இன்று வாடகை காரில் பள்ளிக்கு சென்றனர். கார் ஓட்டுனர் பள்ளி வாயிலில் சிறுமிகளை இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. 



ஆனால், இரு சிறுமிகளும் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறவே அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 



புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாயமான சிறுமி பள்ளி சீறுடையை தவிர மாற்று உடையும் கொண்டு வந்ததாக தெரிகிறது. 



இதைத் தொடர்ந்து, சிறுமிகள் இருவரும் பள்ளிக்கு விடுமுறை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் அருகில் உள்ள வணிக வளாகங்களில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். 



இந்த நிலையில், மாயமான சிறுமிகளின் பெற்றோர், பள்ளிக்கு சென்று சிறுமி மாயமானது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும், தங்கள் குழந்தைகள் மாயமானதற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு என்று கூறி பள்ளி வாயில் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். 

பள்ளிக்கு சென்ற இரு சிறுமிகள் மாயமான சம்பவம் கோவையில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...