இரட்டை இலை சின்னம் விவகாரம்: அக்.,5-ம் தேதி இறுதி விசாரணை

இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக. இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி ஓ.பி.எஸ் அணி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். தொடர்ந்து ஓ.பி. எஸ் ., மற்றும் பழனிசாமி அணியினர் இணைந்த நிலையில் மீண்டும் இரட்டை சிலைசின்னத்தை மீட்க முடிவு செய்தனர். இந்நிலையில் சின்னம் தொடர்பாக விரைவில் முடிவு எடுக்க கோரி மதுரை ஐகோர்ட் கிளை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதனையடுத்து வரும் 29-ம் தேதிக்குள் இரு தரப்பும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து வரும் 5-ம் தேதி இறுதி விசாரணை நடக்கும் எனவும், 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதிக்கு பின்னர் கூடிய செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பட்டியலையும் சமர்பிக்கும் படியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...