தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது - தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்வதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

கோவையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தொழில்துறை சார்பாக நடைபெறும்  தொழில் வசதிச் சட்டம் மற்றும் விதிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும்  கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சென்னையில் 267 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் செய்து வருவதாகவும், அங்கு பல நிறுவனங்கள் தொழில் துவங்க முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் துறையினருக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னணி மாநிலமாக திகழவதாகவும், தமிழகத்தில் 72 ஆயிரம் கோடி தொழில் முதலீடு பெறப்பட்டு 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை பன்னாட்டு விமான நிலைய  விரிவாக்க பணிகள் மற்றும் கோவையில் மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...