கோவை மாநகர் பகுதியில் கடந்த ஆண்டில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன - பூங்கா திறப்புவிழாவில் மாநகராட்சி ஆணையர் பேச்சு


கோவை சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த பூங்கா, சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் முயற்சியால் புனரமைக்கப்பட்டடது. அனைத்து சீரமைப்புப் பணிகளும் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும குழந்தைகளின் பயன்பாட்டிற்காக பூங்கா இன்று (25.09.2017) திறக்கப்பட்டது.



இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள்,  தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் மாநகராட்சியின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு மட்டும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,212 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் மாநகராட்சியே செய்வது சிரமம். பொதுமக்கள் பங்களிப்பின்றி நல்ல செயல்கள் நடைபெறாது.



தற்போது திறக்கப்பட்டுள்ள பூங்கா கோவை மாநகராட்சியின் கண்காணிப்பில் இருக்கும். இருந்தபோதும் இந்த பூங்காவை அழகாக வைத்திருப்பது பொதுமக்கள் கையில்தான் உள்ளது. இது போன்ற பூங்காக்கள் பொதுமக்கள் நடை பயணம் மேற்கொள்ளவும், பொழுதுபோக்கிற்காகவும் பயன்படும் இடமாக இருப்பதோடு, உள்ளத்தையும், உடலையும் சீர்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், சி.ஆர்.ஐ. நிறுவனத்தின் இணை இயக்குனர் செல்வராஜ் மற்றும் ஜி.ஆர்.ஜி. சந்திரகாந்தி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...