ஆக்கிரமிப்பு மீட்பு நடவடிக்கைக்கு இடையூறு- குட்டையின் கரையை உடைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை சுல்தான்பேட்டை பகுதியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் நீர்த்தேக்க குட்டை ஒன்று உள்ளது. அப்பகுதியின் நீராதாரமாக விளங்கும் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையின் கரைப்பகுதியை உடைத்துள்ளதாகவும், இதனால் சேமிக்கப்பட வேண்டிய நீர் வீணாகிவருவதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இது தொடர்பாக புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

எங்கள் ஊரின் மிக முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படும் வகையில் குட்டை ஒன்று உள்ளது. எங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால், குட்டை வேகமாக நிரம்பி வந்தது. ஆனால், நீர்ப்பிடிப்பு பகுதியான குட்டையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அங்கு நீர் தேங்காத வண்ணம் குட்டையில் கரையினை உடைத்துவிட்டு நீரை வெளியேற்றிவருகின்றனர்.



இதனால் எங்கள் பகுதியின் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தெடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுத் தர வேண்டும்.



இவ்வாறு அப்பகுதி மக்கள் கூறினர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...