வெட்டுப்பட்ட தமிழருக்கு சிகிச்சை தர மறுத்த கேரள மருத்துவமனைகள்


அரியலூர் மாவட்டம் உடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் ராஜேந்திரன் (44). இவருக்கு திருமணமாகி 3 மகன்கள் உள்ளனர். கட்டிடத் தொழிலாளியான ராஜேந்திரன் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மேஷனாக பணியாற்றி வந்தார். 

இந்த நிலையில், கடந்த ஞாயிறன்று சக தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனின் கை மற்றும் கால்களில் வெட்டுப்பட்டது. 

இது தொடர்பாக, குட்டிப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை குட்டிப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜேந்திரனின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், வெட்டுக்காயமடைந்த ராஜேந்திரனுக்கு அம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து, ராஜேந்திரனின் மனைவி கல்பனா மற்றும் மகன் ராகவன் ஆகியோர் திருச்சூர், கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.



இதுதொடர்பாக ராஜேந்திரனின் மகன் ராகவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் தந்தைக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டதை அறிந்து உடனடியாக கேரளா விரைந்தோம். அங்குள்ள மருத்துவமனைக்கு தந்தையை அழைத்துச் சென்றேன். காயம் தொடர்பான விவரங்களை கேட்கும் முன் நாங்கள் தமிழர்கள் என்பதை அறிந்து கொண்ட மருத்துவமனை ஊழியர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். அதோடு, இங்கு அறுவை சிகிச்சைக்கான எந்த உபகரணங்களும் இல்லை என்று கூறி தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல கூறினர்.

கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்க ரூ.70 ஆயிரம் கேட்டனர். ஏழ்மை நிலையில் வாழும் எங்களால் அந்த பணத்தை செலுத்த முடியவில்லை.

அதன்பின்னர், எனது தந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை அளிக்க தாமதமானதால் காலில் உள்ள செல்கள் இறந்துவிட்டதாகவும், அதனால் காலை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

தமிழர் என்பதற்காக என் தந்தைக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்த காரணத்தினால் இப்போது என் தந்தையின் காலை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதற்கான நிவாரணமும், நீதியும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாகவே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு கேரள மருத்துவமனைகள் சிகிச்சை தர மறுத்ததால் அவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...