உயர் அதிகாரிகளின் ஆய்வின் போதே இந்த அவலமா..? - கோவை அரசு மருத்துவமனையில் ஸ்டிரெச்சர்கள் இல்லாமல் அவதியுறும் நோயாளிகள்

கோவை அரசு மருத்துவமனையில் உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டிருந்த நேரத்திலேயே ஸ்டிரெச்சர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். கோவை மாவட்டம் அல்லாது திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். 

விபத்து அல்லது நோய் தொற்று தாக்கி நடக்க இயலாத பொதுமக்களை அந்தந்த வார்டுகளுக்கு அனுப்ப ஸ்டிரெச்சர்கள் உள்ளன. ஆனால், கடந்த சில நாட்களான ஸ்டிரெச்சர் வசதி போதுமான அளவில் இல்லாத காரணத்தால் நோயாளிகள் கடும் வலியுடன் மருத்துவமனை வளாகத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கடந்த வாரம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவருக்கு விபத்து ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஸ்டிரெச்சர் மற்றும் சக்கர நாற்காலிகள் இல்லாத காரணத்தால் அவரை அவசர சிகிச்சை வார்டுக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு தாமதம் ஏற்படவே, நடராஜன் வலியால் துடித்தார். இந்த காட்சி காண்போரை கண் கலங்க வைத்தது. 

இது குறித்து, தனியார் வார நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன், கோவை அரசு மருத்துவமனையில் 96 சக்கர நாற்காலியும், 98 ஸ்டிரெச்சர்களும் உள்ளதாகவும், நிரூபர்கள் தவறான செய்தியை பதிவு செய்வதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.  

இந்த நிலையில், ஸ்டிரெச்சர் வசதியில்லாமல் அரசு மருத்துவமனையில் இருந்து கால்களில் நோய் தொற்று ஏற்பட்டு நடக்க இயலாத நோயாளி ஒருவர் அவதிப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளவும்,  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை பார்வையிடவும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஹர்மந்தர்சிங் இன்று (அக்.,23) கோவை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் மருத்துவமனை முதல்வர் அசோகன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் ஆகியோரும் உடனிருந்தனர். 

ஆய்வு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் கால்களில் நோய் தொற்று ஏற்பட்டு, நோயாளி ஒருவர் கடும் வலியுடன் நடந்து வந்தார். அவரது உறவினரிடம் செய்தியாளர்கள் 'ஸ்டிரெச்சர் இல்லையா?' என்று கேள்வியெழுப்பினர்.  அப்போது அவர், 'ஸ்டிரெச்சர் இல்லை, மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் ஸ்டிரெச்சர் கேட்டால் இல்லை என்று பதில் அளிக்கின்றனர்' என்று பதிலளித்து கனத்த மனதோடு சென்றார். 

தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையில் போதுமான ஸ்டிரெச்சர்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் இல்லாமல் இருப்பது அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்லும் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறைகளை சுட்டிக்காட்டும் ஒரு சில பொதுமக்களையும் மருத்துவமனை அதிகாரிகள் விமர்சனம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், இன்னும் பல உயிர்கள் வலியுடன் போராட வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை சிங்காநல்லூரில் உரிமையற்ற 74 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் பொது இடங்களில் நீண்ட நாட்களாக உரிமையின்...

74 Unclaimed Two-Wheelers Seized During Police Drive in Singanallur Limits

Coimbatore Singanallur police seized 74 unattended two-wheelers found parked for long periods along roadsides and in pub...

10 kg Cannabis Seized near Karumbukadai; Mother, Son Among Three Arrested

Karumbukkadai Woman Inspector Muthulakshmi arrested three people, including a 47-year-old woman and her son, after polic...

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...