அரசு மருத்துவமனையில் சுற்றித்திரியும் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது - முதல்வர் அசோகன்

கோவை, அக்டோபர்.28: கோவை அரசு மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் தனியார் மருத்துவமனையின் இடைத்தரகர்களை பிடிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் B.அசோகன் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் சுற்றித்திரியும் சில இடைத்தரகர்கள் சிகிச்சை பெற வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து லாப நோக்கத்துடன் தனியார் மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர். அங்கு, பல்வேறு காரணங்களையும், மருத்துவ மொழியில் புரியாத பெயர்களையும் கூறி நோயாளிகளிடம் பணம் சுரண்டப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரசேகர் (40) என்வரை மூளைச்சலவை செய்ய வந்த இடைத்தரகர் ஜான் என்கிற முருகன் என்பவரை போலீசார் கைது செத்தனர்.

இது தொடர்பாக, கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர்.B.அசோகன் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது :- 

இந்த மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் பல நோயாளிகள வருவதை பயன்படுத்திக்கொள்ளும் சில தனியார் மருத்துவமனைகள். இடைத்தரகர்களை அனுப்பி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை மூளைச்சலவை செய்து அவர்களின் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

முற்றிலும் லாப நோக்கில் நோயாளிகளை அழைத்துச்செல்லும் சில தனியார் மருத்துவமனைகள் இறுதியில் அவர்களுக்கு தருவது ஏமாற்றம் மட்டுமே. 

விபத்தில் சிக்கி இம்மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் போது மறைந்திருக்கும் சில நபர்கள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களிடம் பேசி அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். 

வழக்கறிஞர்கள் 

இதேபோல், வழக்கறிஞர்கள் சிலர் விபத்தில் சிக்கியவர்களிடம், வழக்கு நடத்தி காப்பீடு பெற்றுத் தருவதாக கூறுகின்றனர். வழக்கு நடத்துவதற்கான மொத்த செலவினங்களையும் அவர்களே ஏற்று நடத்துகின்றனர். காப்பீட்டு தொகை கைக்கு வந்ததும் கணிசமான தொகையினை அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். வழக்கின் தன்மைக்கு ஏற்ப தான் முதலீடு செய்த பணத்திற்கு வட்டிபோட்டு பணம் வசூலிக்கும் சிலரும் உள்ளனர். காப்பீடு காலம் முடிவடைதல் உள்ளிட்ட சில காரணங்களால் காப்பீட்டுத்தொகை கிடைக்காதபோது தனியார் மருத்துவமனைக்கான செலவு, வழக்கறிஞர்களுக்கு ஆன செலவு என மொத்த தொகையும் அந்த நோயாளியின் தலையில் விழுந்துவிடுகிறது. 

கண்காணிப்பு குழு

மக்கள் இதுபோன்ற நபர்களிடம் ஏமார்ந்து விடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால், மருத்துவமனை வளாகத்திற்குள் பல இடங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனையில் இதுபோன்ற இடைத்தரகர்கள் புகுந்து நோயாளிகளை மூளைச்சலவை செய்யாமல் இருப்பதற்கு கண்காணிப்பு குழு ஒன்று உள்ளது. இந்த கண்காணிப்பு குழுவில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உள்ளனர். தாமாக தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களை தவிர, மற்ற நோயாளிகளை மூளைச்சலவை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு டாக்டர் B.அசோகன் கூறினார்.

Newsletter

கல்வி, ஆராய்ச்சியில் நெறிமுறைகளில் சமரசம் கூடாது: பாரதியார் பல்கலை ஆசிரியர் தின விழாவில் வலியுறுத்தல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் அதேவேளையில், கல்வித் தரம், ஆராய்ச்சி நேர்மை, ஒழு...

Teachers’ Day Celebration at Bharathiar University Highlights Role of Technology and Ethics

The evolving role of educators and the importance of ethics, research integrity and social responsibility in higher educ...

ரத்தினபுரியில் வீட்டின் முன் விளையாடிய குழந்தை நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு

கோவை ரத்தினபுரி வ.உ.சி. நகரில் ஒரு வயது ஆண் குழந்தை வீட்டின் முன்பு விளையாடும்போது சரியாக மூடப்படாத நிலத்தடி தண்ணீர் தொட...

Toddler Dies After Accidental Fall into Water Sump in Coimbatore

Dhanvanth, a one-year-old child, died after he allegedly fell into an underground water sump near his house in Rathinapu...

Man Severely Beaten by Public Over Alleged Chain-Snatching Attempt Near Pappampatti

A video showing members of the public assaulting a man allegedly caught after attempting to snatch a gold chain from a w...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டுக்கான முதலாமாண்டு B.E/B.Tech மாணவர்களுக்கான YUVA 2026 வரவேற்பு ந...