5 லக்ஷத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் நிமோனியாவால் பாதிப்பு, தடுப்பூசி போடுவது அவசியம்


கோவை, நவம்பர் 10: இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள்  நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த நோயிலிருந்து குழந்தைகளைக் காக்க தடுப்பூசி போடுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தல்.

கோவையில் இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை மருத்துவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.



இந்த சந்திப்பின் போது நிமோனியா நோயின் பாதிப்புகளும் அதனை எவ்வாறு தடுக்கலாம் என விவாதிக்கப்பட்டது.

 சர்வதேச அளவில் நிமோனியா நோய் ஏற்பட காரணமான ஸ்ட்ரெப்டோகாக்ஸ் நிமோனிக்கா என்னும் பாக்டீரியாவால் இறப்பு சதவிகிதம் மூன்றில் ஒரு பங்கு உள்ளது.

இந்த நோய் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளை அதிக அளவில் தாக்குகிறது.

இதுக்குறித்து இந்திய குழந்தைகள்நல மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் எம்.இஸ்மாயில் கூறியதாவது, நிமோனியா நோயை தடுக்க தற்போது நம்மிடம் பிசிவி 13 என்ற தடுப்பூசி உள்ளது. இதன் மூலம் லட்சம் குழந்தைகளை இந்த நோயிலிருந்து காக்க முடியும். 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



இந்தியாவில் இந்தாண்டு மார்ச் முதல் தான் இந்த தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது. 2௦18-ம் ஆண்டுக்குள் 9௦ சதவிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

2௦15-ம் ஆண்டு மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 5,64,200  குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,5௦௦ குழந்தைகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

ஐக்கிய நாடுகள் திட்டம் மூலம் இந்த ஆண்டில் 21 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நோயை தடுக்கும் முறை பற்றி பெற்றோர்களுக்கு இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் சிறப்பான முறையில் எடுத்து கூறிவருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிமோனியா நோயை தடுக்கும் முறை குறித்து மருத்துவர் ஜெயஸ்ரீ கூறுகையில், "குழந்தை பிறந்த 6 மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவது அவசியம். போதுமான ஊட்டசத்துகளை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...