கோவையில் இளநீர் விற்பனை படு ஜோர்


கோவை, நவம்பர் 13

கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் இளநீரை அதிக அளவு பருகி வருகிறார்கள்.

கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி. கேரளா மாநிலம் பாலக்காடு, ஆழுவா போன்ற பகுதிகளிலிருந்து விற்பனைக்கு இளநீர் கொண்டுவரப்படுகிறது.

இரவு நேரங்களில் குளிர் வாட்டி வதைத்த போதும் பகலில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள், நடைபாதை வியாபாரிகள், மக்கள் என அனைவரும் வெயிலின் உஷ்ணம் தாங்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். இது குறித்து ஐ.டி ஊழியர் ஜே. கார்த்திக் கூறுகையில் “ தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இரு சக்கர வாகனத்தில் செல்வதால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு வயிற்று வலி, தலை வலி போன்றவை ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள தினமும் இளநீர் பருகி வருகிறேன். இதனால் உடல் உஷ்ணம் குறைந்து நன்றாக உள்ளது” என்றார்.

இளநீர் விற்பனை அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். தற்போது இளநீர் ரூபாய் 2௦ முதல் 3௦ வரை விற்கப்படுகிறது. அதே சமயம் இளநீர் வரத்து சந்தைக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. எனினும் விளைச்சல் குறைந்தது காரணமாக இளநீர் வரத்து குறைந்து தான் காணப்படுகிறது என வியாபாரிகள் கூறினர்.

இளநீர் வியாபாரி எல். முத்துசாமி கூறுகையில்” இளநீர் வியாபாரம் நன்றாக உள்ளது. பொதுமக்கள் அந்நிய நாட்டு பானத்திற்கு எதிராக விழிப்புணர்வு அடைந்து தற்போது இயற்கை பானமான இளநீரை அதிக அளவில் குடிக்க தொடங்கிவிட்டனர். வியாபாரம் நன்றாக இருந்தாலும் இளநீர் வரத்து குறைந்து தான் காணப்படுக்கிறது. கேரளாவிலிருந்து இளநீர் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. லாரி வாடகை அதிகமாக உள்ளதால் இளநீர் விலையும் அதிகமாக உள்ளது.” என்றார்.

ஒரு நாளைக்கு குறைந்தது 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதே போல் இளநீர், பழங்கள், பழச்சாறு போன்றவை பருகும் போது உடல் இன்னும் ஆரோக்கியம் அடைகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

Newsletter

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...

FL2 Bar on Peelamedu-Vilankurichi Road Sealed Following Altercation Complaint

An FL2 liquor bar on Peelamedu-Vilankurichi Road in Coimbatore was sealed on September 8 following a police case over a...

விதிமீறல்: பீளமேடு மதுபானக் கூடத்திற்கு சீல் வைப்பு

கோவை பீளமேடு FL.2 மதுபானக் கூடத்தில் மோதல் சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து, உறுப்பினர் அல்லாதோருக்கு மது விற்பனை செய்ததாலும்...