காவல் துறையில் ஒரு இயக்குனர் : சிறுகதைச் சித்தரான காவலர் குறித்த செய்தித் தொகுப்பு

நம் தமிழக மக்களிடையே திறமைகளுக்குப் பஞ்சமில்லை. எப்படிப்பட்ட சோதனை காலத்திலும் சாதித்து வெற்றிகண்ட பலரை மிகச்சுலபமாக இதற்கு உதாரணமாகச் சொல்லிவிட முடியும். அந்த வகையில், எத்தனை இடர்பாடுகள் ஏற்பட்ட போதிலும் சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தனது குறிக்கோளை அடைந்தே தீரவேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்களை இயக்கி வருகிறார் கோவையைச் சேர்ந்த காவலர் மகேஸ்வரன் என்ற ராக்கி மகேஷ்.



முயற்சி ஒன்றையே மூலதனமாக்கி, இடர்பாடுகளை தகர்த்தெறிந்து சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு மிகச்சிறந்த உதாரணமாய் நிற்கிறார் இந்த சிறுகதைச் சித்தர்.  சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் (51). கிராமத்தில் பிறந்த ஏழை விவசாயியின் மகனான இவர் சேலம் கலைக்கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் பயின்று தொலைதூரக்கல்வி வாயிலாக எம்.ஏ பயின்றுள்ளார். சிறு வயது முதலே சிறுகதைகள் எழுதுவது மற்றும் நாடகங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு சினிமாத் துறையில் தனது வருகையை அழுந்தப்பதிக்க வேண்டும் என்பது கனவு. 

கனவுகள் 

குடும்ப சூழல் காரணமாக தனது கனவுகளுக்கு சற்றே ஓய்வு கொடுத்து ஒரு நிறுவனத்தில் கணக்காளராக வேலைக்குச் சேர்ந்தார். அதே நேரத்தில் காவலர் பணிக்கான தேர்வையும் எழுதியிருந்தார். தான் சிறுவயதில் இருந்து கண்ட கனவு சிதைவதை பொறுக்கமுடியாத மகேஸ்வரன் பணி விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள தொலைக்காட்சி நிலையத்தின் வாசலில் நின்றார். அப்போது, சின்னத்திரை நாடகம் இயக்குவதற்கான வாய்ப்பு ஒன்று இவருக்கு கிடைக்க அதே நேரத்திலேயே இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிய அரசாணையும் கிடைக்கப்பெற்றார் . சாதிக்க சிறிது அவகாசம் கேட்ட இவரது கோரிக்கைகள் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டது. காவல் பணியின் மீது காதல் இருந்தாலும், தனது கனவை நனவாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்த மகேஸ்வரனுக்கு பெற்றோரின் நிர்பந்தமும், வதைத்த வறுமைச் சூழலும் முட்டுக்கட்டாக அமைந்தது. 

மக்கள் காவலர் 

கடந்த 1994-ம் ஆண்டு கோவை மாநகர காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிக்கு சேர்ந்தார். ‘கலர்புல்’ படங்களை இயக்க நினைத்த இவரது கனவுகள் காக்கிச்சட்டை பாக்கெட்களினுள் ஒளிந்துகொண்டன. 



10 ஆண்டுகள் கனவுகள் உறங்கியே கிடக்க கடந்த 2004-ம் ஆண்டு அவர் எழுதிய சிறுகதையை “புகுந்த வீட்டை புரிந்துகொள் மகளே” என்ற புத்தகமாக வெளியிட்டது மணிமேகலை பிரசுரம். சிறப்பான புத்தகத்திற்காக உலக கலைத் தமிழ் மன்றத்தின் சார்பில் “சிறுகதைச் சித்தர்” என்ற விருது ராக்கி மகேஷ்-க்கு வழங்கப்பட்டது. 

குறும்படங்கள் 

கனவின் முதற்படிக்கு கிடைத்த அங்கீகாரத்தை முதலாக இட்டு பொதுமக்களுக்கான விழிப்புணர்வு குறும்படங்கள் இயக்க முடிவு செய்தார். மாநகர காவல்துறையில், சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து என்ற அனைத்து துறைகளிலும் பணியாற்றிய ராக்கி மகேஷ், தான் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் கதைகளையும், நிகழ்வுகளையும் குறும்படங்களாக இயக்கியுள்ளார். தாலி சாட்சி, நில்-கவனி-செல், என் தங்கட்சிக்கு கல்யாணம் உள்ளிட்ட 7 குறும்படங்களையும் 2 விழிப்புணர்வு பாடல்களையும் இயக்கியுள்ளார் இவர். 



இவர் இயக்கிய பெரும்பாலான் குறும்படங்கள் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தும் விதமாகவே உருவகம் பெற்றது. இவர் இயக்கிய “இது தகுமா?” என்ற குறும்படம் வடமாநிலத்தவர்களால் பெருதும் கவரப்பட்டு இந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது.

ஏன்? 

ஏன் போக்குவரத்து விழிப்புணர்வு கதைகளையே தேர்வு செய்கிறீர்கள்எ? ன்று கேட்டதற்கு, “ஒரு காவலராக நான் தினமும் பல விபத்துக்களை சந்திக்கிறேன், பதற்றமடைகிறேன். விலைமதிக்க முடியாத மனித உயிர் வாகன விபத்துக்களால் பறிபோவதை தடுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டே இவ்வகை கதைகளை தேர்வு செய்கிறேன். இதற்காக எனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வருகிறேன்” என்றார். 

மனித உயிருக்கு மதிப்பளித்து வழிப்புணர்வை ஏற்படுத்திவரும் இந்த மக்கள் காவலருக்கு பல்வேறு சங்கங்களும், கழகங்களும் அங்கீகாரம் அளித்தன. அதன்வாயிலாக, “சிறுகதை சித்தர், சிறுகதை சுடர், தமிழ்மாமணி, தமிழ்ச் சுடர் போன்ற பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். 

லட்சியம் 

காவல்துறையில் தனது பணி ஓய்வுக்குப் பின்னர் சினிமாத்துறையில் கால்பதித்தே தீரவேண்டும் என்று முழுமூச்சுடன் செயல்பட்டுவரும் இந்த காவலர் சமூக அக்கறையுள்ள படங்களை மட்டுமே இயக்க இருப்பதாக பெருமிதம் கொள்கிறார். இவர் இயக்கிய அத்தனை குறும்படங்களும் “ராக்கி பிலிம்ஸ்’ என்ற “யூடியூப்” (YouTube) பக்கத்தில் உள்ளன. 



மனிதன் எந்த ஒரு வறுமை நிலையிலும், சிந்தனை காலத்திலும் தன் இலக்கை அடைக்க முயற்சி செய்துகொண்டே இருந்தால் அதை நிச்சயம் அடைந்திடுவான் என்பதற்கு ராக்கி மகேஷ் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துவருவது பாராட்டுதலுக்குரியது. 

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...