குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயம்


டிசம்பர் 4

குன்னூரில் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டெருமை தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.



மலை மாவட்டமான நீலகிரியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக, காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிகளிலும், நகரின் மையப்பகுதிகளிலும் உலா வருகின்றன. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் காட்டெருமைகளால், விபத்துக்குள்ளாகி பலர் பலத்த காயமடைந்துள்ளனர். 

இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் முனியாண்டி (58) என்பவர் வீட்டு வாசலில் காட்டு எருமை இருப்பதை கவனிக்காமல் வெளியே வந்துள்ளார். அப்போது, அவரை காட்டெருமை தூக்கி வீசியது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த முனியாண்டியின் தலையில் பலத்த அடிபட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முதலுதவி செய்யப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 14 தையல் போடப்பட்டது. காட்டெருமைகளின் தொடர் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு வலியுறுத்தினர். 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...