புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் இடமாற்றம் செய்வதை கைவிட வலியுறுத்தல்

கோவை, டிசம்பர் 4

கோவையில் இயங்கி வரும் புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்யப்படுவதை கைவிட வலியுறுத்தி, புலி வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனக்கல்லூரி வளாகத்தில் புலிகள் திட்டக் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த அலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்ய தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை மாவட்ட சமூக மற்றும் வன ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவ்வலுவலகத்தை இடமாற்றம் செய்வதைக் கைவிடக்கோரி, புலி வேடமணிந்து வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழகத்தில் உள்ள 4 புலிகள் காப்பகங்களில் களக்காடு முண்டாந்துறை தவிர்த்து, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் ஆகிய 3 புலிகள் காப்பகங்கள் கோவை சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ள நிலையில், முறையான காரணமின்றி அவ்வலுவலகத்தை சென்னைக்கு இடமாற்றம் செய்வது அவசியமற்றது என விவசாயிகள் தெரிவித்தனர்.



மேலும், புலிகள் திட்ட முதன்மை வனப்பாதுகாவலர் அலுவலகம் தொடர்ந்து கோவையில் செயல்பட வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...