இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்ட 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

கோவை, டிசம்பர் 23

கோவையில் உள்ள பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது. மேலும் இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.



கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி உள்ளதையொட்டி, கிறிஸ்துவர்கள் இல்லங்கள், விடுதிகள், வணிக நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மற்றும் சான்டாகிளஸ் போன்ற பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, கோவை சாய்பாபா கோவில் அருகே உள்ள பாப்பிஸ் ஹோட்டல், டிரீம் ஃப்ளவர் ஈவென்ட்சுடன் இணைந்து மிக உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். சுமார் ஒரு வார காலத்தில் 1.2 டன் எடையுடைய 63 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை 30 பேர் கொண்ட குழு உருவாக்கி உள்ளனர். மின் விளக்குகள் நட்சத்திரங்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தொடர்புடைய பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியாவிலே மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் என்ற பெயரை தட்டிச்சென்றதுடன், யுனிவர்சல் அச்சீவர்ஸ் என்ற சாதனை புத்தகத்திலும் இந்த மரம் இடம் பெற்றுள்ளது.



இது தொடர்பாக, பாப்பிஸ் ஹோட்டல் குழுமம் செயற்பாட்டு மேலாளர் ஜெயராமன் கூறுகையில், திட்டமிடல் முதல் வரைதல் மற்றும் மரத்தை உருவாக்குதல் வரை எங்கள் அணி படிப்படியாக வேலை செய்தது. கோவையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும், கின்னஸ் உலக சாதனைப் பதிவில் எங்களது பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த முயற்சி செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.



இதற்கு முன்னர், மும்பையின் வர்லி நகரில் உள்ள ஒரு தனியார் சமுதாயம் 56 அடியிலும், 2014-ம் ஆண்டில் ஷாப்பர் ஸ்டாப் லிமிடெட் 40 அடி உயரத்திலும் கிறிஸ்துமஸ் மரங்களை உருவாக்கியிருந்தன. தற்போது, இந்தச் சாதனைகளை பாப்பிஸ் ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள 63 அடி உயரமான கிறிஸ்துமஸ் மரம் உடைத்துள்ளது. இந்தியாவின் மிக உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரம் இன்று முதல் ஜனவரி 2, 2018 வரை பாப்பிஸ் ஹோட்டலில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...