பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைப்பு

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

கோவை, ஜனவரி 22

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.

அண்மையில் தமிழக அரசு பேருந்து கட்டணங்களை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சாய் கணேஷ் என்பவர் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து, தனது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார். சென்னையைச் சேர்ந்த சாய் கணேஷ் கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், பேருந்து கட்டண உயர்வு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைப்பதாக அவர் கூறினார். 

சாய் கணேஷின் இந்தச் செயலுக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த ஒரு சிலர் பேசியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...