பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவிநாசியில் கடை அடைப்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருப்பூர், ஜனவரி 25

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு சமீபத்தில் பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியது. இதனால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபுறம் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விலை உயர்வும், ஜிஎஸ்டி போன்ற வரி அதிகரிப்பும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை வாட்டிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த செயல் அனைத்துத் தரப்பினரிடையேயும் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தொடர்ந்து, தமிழக அரசின் இந்த மக்கள் விரோதத் திட்டத்தை எதிர்த்து மாணவர்களும், கட்சி அமைப்பினரும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தமிழக அரசின் பேருந்து கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று காலை முதலே அவிநாசி நகர் பகுதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் டீக்கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.

மேலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதுமே சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்த அளவிலேயே உள்ளது.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...