ஸ்மார்ட் சிட்டியில் தெருநாய் பிரச்சனைக்கு தீர்வு என்ன?

கோவை: ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து வருகிறது நமது கோவை மாநகரம். பல்வேறு வசதிகளை நகருக்குள் புகுத்த முனைப்பு காட்டும் ஸ்மார்ட்டான அதிகாரிகள், தெருநாய் பிரச்சினையில் பின்தங்கிய திட்டங்களையே வகுத்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக நகரில் தெருநாய் தொல்லை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.


கோவை: ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து வருகிறது நமது கோவை மாநகரம். பல்வேறு வசதிகளை நகருக்குள் புகுத்த முனைப்பு காட்டும் ஸ்மார்ட்டான அதிகாரிகள், தெருநாய் பிரச்சினையில் பின்தங்கிய திட்டங்களையே வகுத்து வருகின்றனர். கடந்த ஓர் ஆண்டாக நகரில் தெருநாய் தொல்லை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் கூட்டமாக தெருக்களை ஆக்கிரமிக்கும் தெருநாய்கள் பொதுமக்களை விரட்டுவதோடு, சில நேரங்களில் கடிக்கவும் செய்கின்றன.

நாய் கடிக்கு பயந்து வாகனத்தை அதி வேகமாக செலுத்துவதால் அவ்வப்போது சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க நாய் கடியால் ஏற்படும் ரேபிஸ் நோய், மருத்துவ சிகிச்சைக்கு பின்னரும் மனிதர்களை உருக்குலைந்து விடுகின்றது.

தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து நபர்கள் தெருநாய் கடித்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

குதறலும்-கதறலும்

உச்ச கட்டமாக சாய்பாபா காலனி அருகே உள்ள பாரதி பார்க் பகுதியில் பொது இடங்களில் சுற்றித்திரிந்த தெருநாய்கள், தற்போது வீடுகளுக்குள் புகுந்து சோஃபாக்களை கடித்துக் குதறத் தொடங்கியுள்ளன.



"மூடப்படாமல் தெருவோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டிகளில் கெட்டுப்போன இறைச்சிகள் கொட்டப்படுகிறது. இதை உண்ணும் தெரு நாய்களுக்கு வெறித் தன்மை ஏற்பட்டு, அவை மனிதர்களையும் கடிக்க முற்படுகின்றன. எனவே, குப்பைத் தொட்டிகளை முறையாக மூடி பராமரிக்க வேண்டும்." என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்களை பொம்மையாக எண்ணும் பிஞ்சுக் குழந்தைகள், அதனோடு விளையாடுவதால், காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகக் கதறுகின்றனர் பெற்றோர்கள். அவ்வாறு, பொதுமக்களின் எதிரியாக பார்க்கப்படும் இந்த தெருநாய்களை, ஆறறிவு கொண்ட சில மனிதர்கள் கல்லால் அடித்தும், விஷம் வைத்தும் படுகொலை செய்கின்றனர். தெருநாய்களை கல்லால் அடித்து காயப்படுத்துவோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டு ஆறு முதல், ஒன்பது மாதங்கள் வரை சிறையிலடைக்கலாம் என்கிறது சட்டம்.

கருத்தடைக்கு 'நோ'

தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு சிகிச்சையளிப்பதும் மாநகராட்சியின் கடமை. அதற்காகவே, ABC எனப்படும் நாய்களுக்கான கருத்தடையை செய்து பராமரிப்பு செய்யும் பணிகளை ஹியூமன் அனிமல் சொசைட்டி (Humane Animal Society) மற்றும் பிபுல் ஃபார் அனிமல் (People for Animal) யூனிட் II ஆகிய தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.



மாநகரில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 20 வார்டுகளை ஹியூமன் அனிமல் சொசைட்டியிடமும், மீதமுள்ள 80 வார்டுகளை பிபுல் ஃபார் அனிமல் யூனிட் II- இடமும் வழங்கப்பட்டது. இந்த அமைப்புகள் தனக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சுற்றித் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததோடு, நோயுற்ற தெருநாய்களுக்கு சிகிச்சையளித்தும், பராமரித்தும் வந்தன.

2014-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை மொத்தம் 23,583 தெருநாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைகள் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தோடு நிறுத்தப்பட்டதால், தெருநாய்களின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

ரூ.1.5 கோடி

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தெருநாய்களுக்குக் கருத்தடை சிகிச்சை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக அரசு நிர்ணயித்துள்ள தொகையை முறையாக வழங்கி வருகிறது. தெருநாய்களைப் பராமரிப்பதற்காக வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 1.5 கோடி ஒதுக்கப்பட்டு 'நாய்கள் பாதுகாப்பு மையம்' அமைக்கப்பட உள்ளது. விலங்குகளின் நலன் மீது ஆர்வம் கொண்ட பல தன்னார்வ அமைப்புகளை இதில் இணைத்து தெருநாய்களை பராமரிக்க உள்ளோம்." என்றார்.



தெருநாய்களுக்கு செய்யப்படும் கருத்தடை சிகிச்சைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம், இன்னும் கையெழுத்திடப்படாமல் மாநகராட்சி நிர்வாகத்தினரால் நிலுவையில் உள்ளது. இதனால், நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து மக்கள் அவதியுற்று வரும் நிலையில், நாய்கள் பாதுகாப்பு மையம் எந்த அளவுக்கு பயனுள்ளதாக அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

"புதிதாக அமைக்கப்படவுள்ள நாய்கள் பாதுகாப்பு மையம் பற்றி களப் பணியாற்றும் எங்களிடம் எந்த கருத்தையும் கேட்கவில்லை." என்று மாநகராட்சி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டை வைக்கின்றனர் தன்னார்வ அமைப்பினர்.

மாநகராட்சி நிர்வாகம் கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து, தெருநாய் கருத்தடை பணிகளை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆய்வாளர்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

'மனநிலை'

இது குறித்து நலம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் கூறுகையில், "தெருநாய்களை கொண்டு போய் வேறு எங்காவது விட வேண்டும் என்ற மக்களின் மனநிலை முதலில் மாறவேண்டும். இப்பூமியில் தெருநாய்களுக்கும் உயிர்வாழ எல்லா உரிமையும் உண்டு. அதோடு, நாய்கள் நம் தெருக்களில் சுற்றித்திரிவதால் தான் சில பூச்சிகள் நம் வீட்டுக்குள் வராமல் இருக்கிறது. எனவே, அவற்றை முற்றிலுமாக அழித்தொழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் அழிக்க வேண்டும்" என்றார்.

தீர்வு என்ன?

பாதுகாப்பு மையங்களை நிறுவி தெருநாய்களை பராமரிக்கும் முன், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்து வந்த முறையை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து செய்தல் வேண்டும். அதுவே, தெருநாய்கள் தொல்லையில் இருந்து மீள்வதற்கு சரியான தீர்வாக அமையும்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...