'துர்நாற்றம் தாங்க முடியல, புகையினால் மூச்சு விட முடியல' : ஜனாதிபதி விருது வாங்கிய கோவை கிராமத்தின் நிலை

கோவை : கோவை துடியலூர் அருகே தன்னாசி கோவில் வாய்க்கால் பாலம் அமைந்துள்ளது. குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் 2016-ம் ஆண்டு அது தடுக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டன

கோவை : கோவை துடியலூர் அருகே தன்னாசி கோவில் வாய்க்கால் பாலம் அமைந்துள்ளது. குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் 2016-ம் ஆண்டு அது தடுக்கப்பட்டு வேலிகள் அமைக்கப்பட்டன 

இதனிடையே தற்போது குப்பைகளை வாய்க்கால் அருகே உள்ள மேட்டுப்பாளையம் சாலையோரம் வீசிச் செல்கின்றனர். கோழி கழிவுகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிராந்தி பாட்டில்கள், என பாகுபாடு இல்லாமல் அனைத்து விதமான குப்பைகளும் மர்ம நபர்களால் டன் கணக்கில் கொட்டப்பட்டு வருகிறது. சில நேரத்தில் இந்த குப்பைகளை தீ வைத்தும் செல்கின்றனர்.



இதனால், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் பயணிக்கும் வாகன ஒட்டிகளும், அப்பகுதியில் உள்ள மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். 

இது குறித்து தனியார் கல்லூரி மாணவர் பிரவீன் கூறுகையில், "இவ்வழியாக செல்லும் போது துர்நாற்றம் தாங்க முடியவில்லை, மூக்கை போர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது." என்றார். 

அதே பகுதியில் வசித்து வரும் வசந்தாமணி கூறுகையில், "குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு மூச்சுவிடவே சிரமமாக உள்ளது. தமிழகத்தின் தூய்மை கிராமம் விருது வாங்கிய குருடம்பாளையம் ஊராட்சியின் அலட்சியத்தால் தற்போது மக்களுக்கு தொற்றுநோய் கூட பரவ வாய்ப்புள்ளது."என்றார்.



அப்பகுதிக்கு சென்றாலே உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது என்றும், குப்பைகள் காற்றில் பறப்பதால் சாலையில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது என்றும், எனவே இந்த பிரச்சனையில் அதிகாரிகள் தாமதிக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

கடந்த 2015 - 2016-ம் ஆண்டுகளில் குருடம்பாளையம் ஊராட்சி இந்தியாவிற்கே முதன்மை ஊராட்சியாக திகழ்ந்தது. கிராம  மக்களுக்கு இலவச 'வைபை' வசதி, சிறந்த மறுசுழற்சி திட்டம் விருது, தூய்மை கிரமம் விருது, ஜனாதிபதி விருது என்று பல்வேறு விருதுகளை வென்ற பெருமை இந்த ஊராட்சிக்கு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதால் ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலமும் முடிவடைந்ததால்  மக்கள் தங்கள் குறைகளை அவர்களிடம் கூறி சரி செய்ய முடியாமல் உள்ளது. ஊராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது குருடம்பாளையம் ஊராட்சி தனது பெருமைகள் அனைத்தும் இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து குருடம்பாளையம் ஊராட்சி செயலாளர் பிரகாஷ் நம்மிடம் கூறுகையில், "குப்பைகளை வீடு வீடாக எடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குருடம்பாளையம் ஊராட்சியில் மொத்தம் 32 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளுக்கும் குப்பைகளை எடுக்க மினி டிராக்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. சாலை ஓரம் உள்ள குப்பைகள் ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றப்படும். அதில் குப்பை போடுபவர்கள் மீது சுகாதார துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

Newsletter

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...