விவசாயத்தை மேம்படுத்தக் கோரி பாக்கு மரத்துடன் ஆட்சியரிடம் அலுவலகம் வந்த விவசாயிகள்

கோவை: பாக்கு விவசாயத்தை மேம்படுத்தக் கோரி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாக்கு மரத்துடன் வந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை: பாக்கு விவசாயத்தை மேம்படுத்தக் கோரி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாக்கு மரத்துடன் வந்த விவசாயிகள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் பேரூர், மேட்டுப்பாளையம், சிறுமுகை, பொள்ளாச்சி உள்பட பல பகுதிகளில் பாக்கு மரங்கள் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வந்ததாகவும், வறட்சி மற்றும் விலை வீழ்ச்சி காரணமாக பாக்கு விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க வந்தனர்.



இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் 20 சதவிதமாக இருந்த பாக்கு உற்பத்தி தற்போது மூன்று சதவிதமாக குறைந்துள்ளது. முன்பு, 25 ஆயிரம் பேர் பாக்கு விவசாயத்தை நம்பி இருந்த நிலையில், தற்போது 3 ஆயிரம் பேர் மட்டுமே பாக்கு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பாக்கு விற்பனை மையம் இல்லாததால், அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள கொள்முதல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. வெகு தொலைவிற்கு சென்று விற்பனை செய்ய முடியாத காரணத்தால் இடைத் தரகர்களிடம் பாக்கை விற்று வருகிறோம்.

எனவே, பாக்கு மரங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பெருக்கவும், தமிழகத்தில் பாக்கு கொள்முதல் நிலையம் அமைக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்." என்றனர்.

கோரிக்கை தொடர்பாக விவசாயிகள் பாக்கு மரம் மற்றும் பாளை ஆகியவற்றுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...