பாதாளத்தில் தத்தளிக்கும் பாக்கு விவசாயம்: வாரியம் அமைத்து வரி வருவாயைப் பெருக்க விவசாயிகள் யோசனை

கோவை: கொங்கு மண்டலத்தில் 2-வது பிரதான விவசாயமாக விளங்கும் பாக்கு விவசாயத்தை மேம்படுத்த தனிவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கொங்கு மண்டலத்தில் 2-வது பிரதான விவசாயமாக விளங்கும் பாக்கு விவசாயத்தை மேம்படுத்த தனிவாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் தென்னை விவசாயத்திற்கு அடுத்து பாக்கு விவசாயம் பிரதானமாக உள்ளது. 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற வந்த பாக்கு விவசாயம் தற்போது ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவாக குறைந்துவிட்டது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, இரும்பொறை, வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சாவடி, பேரூர், தெலுங்குபாளையம், தொண்டாமுத்தூர், நரசீபுரம் மற்றும் நொய்யல் ஆற்றை ஒற்றிய பகுதிகளில் பாக்கு விவசாயம் அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பாக்குகளை விற்பனை செய்ய இங்கு கொள்முதல் நிலையங்கள் இல்லை. இதனால், பாக்குகளை விற்பனை செய்ய கர்நாடக மாநிலம் மைசூர், கேரள மாநிலம் காசர்காடு உள்ளிட்ட மத்திய அரசாங்கத்தின் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. விவசாயிகள் நீண்ட தூரம் சென்று விற்பனை செய்ய முடியாததால், மூன்றாவது நபர் என சொல்லக்கூடிய தரகர்கள் தமிழக விவசாயிகளிடமிருந்து பாக்குகளை கிலோ ரூ. 24 முதல் 28 வரை வாங்கி சென்று ரூ. 48 முதல் 58 வரை விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகள் இலாபத்தை காது அளவில் கூட கேட்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிச்சாமி கூறுகையில், "பாக்கு விவசாயத்திற்கு என தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் பாக்குகளை நேரடியாக விவசாயிகள் விற்க முடியும், லாபமும் ஈட்டமுடியும். அவ்வாறு வாரியம் அமைப்பதால் அரசாங்கத்திற்கு வரி வருவாயும் அதிகரிக்கும். வறட்சியின் காரணமாக விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலையில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக பாக்கு வாரியம் அமைக்க வேண்டும். இந்தியாவின் மொத்த பாக்கு கொள்முதல்களில் தமிழகம் 25 சதவீதம் பங்களிக்கிறது," என்றார்.

தற்போது, பாக்கு விவசாயத்தில் மறைமுகமாகவும், நேரடியாகவும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடரும் விலைவாசி உயர்வு, இயற்கை பேரிடர், வன விலங்கு தாங்குதல் உள்ளிட்டவற்றால் பாக்கு விவசாயம் பாதிப்படைந்து வரும் நிலையில், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதியில் பாக்கு விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ள ஜெ. அருள்ராக் கூறுகையில், "மேட்டுப்பாளையம், சிறுமுகை போன்ற பகுதிகளில் பாக்கு விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். பாக்கு விவசாயம் செய்வது அதனை உலர்விப்பது, தரம் பிரிப்பது, போன்ற பல்வேறு பணிகளில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாக்கு விவசாயத்திற்கு வாரியம் இல்லாததால் புதிய தொழில் முனைவோரும் இத்தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. தமிழக அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பாக்கு வாரியம் அமைத்து பாக்கு விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்," என்றார்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாகவும், பாக்கு மட்டைகளில் இருந்து தட்டு, டம்பளர்கள் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விலை, வாரியம் இல்லாததால் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் முன்வைக்கின்றனர்.

மங்கல நிகழ்வுகளில் முதலிடம் பிடிக்கும் பாக்குகளை உற்பத்தி செய்யும் பாக்கு விவசாயிகளின் வாழ்க்கையில் மங்கலம் இல்லை. பாதாளத்தில் தத்தளிக்கும் பாக்கு விவசாயத்தைக் காக்க தமிழக அரசு பாக்கு வாரியம் அமைக்க பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...