பாய், படுக்கையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற முயன்ற சி.எம்.சி., காலனி பொதுமக்கள்

கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கோவை: கோவையில் குடிசை மாற்று வாரிய வீடுகளில் உள்ள முறைகேடுகளை களைய வலியுறுத்தி சி.எம்.சி., காலனி பொதுமக்கள் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சி.எம்.சி., காலனி பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும், தலித் மக்களை உள்ளடக்கிய இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக, வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு சுமார் 200 பயனாளிகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக இந்த வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை வெள்ளலூர் போன்ற புறநகர் பகுதிகளுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.



இதனிடையே, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை முறைகேடுகள் இன்றி பெற்றுத் தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாய், தலையணை, காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், தரையில் அமர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.



தினக்கூலி பணிக்கு செல்லும் தங்களுக்கு, சொந்த இடத்திலேயே வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகளில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் விடுத்தனர். பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...