புழுப்பிடிக்கும் பிரேதங்கள் : அகோர நிலையில் பொள்ளாச்சி மருத்துவமனை

கோவை: கோடிக்கணக்கான மக்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் ஒருவர் நிம்மதியாய் வாழ்ந்து மரணிப்பது என்பது ஒரு வரம் தான். ஆனால், அந்த கொடுப்பனை பலருக்கும் கிடைப்பதில்லை. பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்ற போதை வஸ்துக்கள் சக மனிதனுக்கும் சேர்த்தே இந்த உலகம் என்பதை மறைத்து விடுகின்றன.


கோவை: கோடிக்கணக்கான மக்கள் சூழ்ந்த இந்த சமூகத்தில் ஒருவர் நிம்மதியாய் வாழ்ந்து மரணிப்பது என்பது ஒரு வரம் தான். ஆனால், அந்த கொடுப்பனை பலருக்கும் கிடைப்பதில்லை. பணம், பதவி, அதிகாரம், புகழ் போன்ற போதை வஸ்துக்கள் சக மனிதனுக்கும் சேர்த்தே இந்த உலகம் என்பதை மறைத்து விடுகின்றன. 

இதனால், மனிதனாலேயே மனிதன் துன்பப்படும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. வாழும் வரை தான் நிம்மதியில்லை, மரணத்திலாவது மதிப்பு கிடைக்கும் என்றால், அதையும் கேள்விக்குறியாக்கிவிடுகிறது அரசு. 

உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு கூட காலம் தாழ்த்திய கதையெல்லாம் நாம் அறிந்ததே.!

இதையெல்லாம் கடந்து, உயிரிழந்தவர்களின் சடலத்தை புழு பிடிக்க வைத்து, நாற்றம் எழும்பச் செய்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை.



ஆயிரக்கணக்கில்..

பொள்ளாச்சியில் செயல்படும் அரசு தலைமை மருத்துவமனையை ஆனைமலை, உடுமலை, வால்பாறை, நெகமம் என்று பொள்ளாச்சியை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் 2 ஆயிரம் வெளி நோயாளிகளும், 800-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் இந்த மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். 

போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளின் உடல் நிலை மோசமானால், அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப அந்த மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைக்கிறது. 



அவ்வாறு, பொள்ளாச்சியில் இருந்து கோவை செல்வதற்கான சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் நோயாளிகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்தே பயணிக்கின்றனர். அதனால், சிலர் உயிரிழந்தும் விடுகின்றனர்.



பிரேதங்கள்

இந்த மருத்துவமனையின் கீழ் 15 சிறிய மருத்துவமனைகள் செயல்படுகின்றன. சிகிச்சை பலனின்றியும், விபத்தில் சிக்கியும், கொலை அல்லது தற்கொலை செய்தும் இறந்தவர்களின் உடல்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன.

ஆனால், பிரேதே பரிசோதனைக்கு சரியான வசதிகள் இல்லாத காரணத்தாலும், குளிர்சாதனப் பெட்டிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தாலும், சடலங்கள் கேட்பாரற்று கிடைக்கின்றன. அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பல சடலங்கள் புழுப்பிடித்து அழுகிய நிலையில் கிடக்கின்றன.



ஆதரவற்றோர்

சமீபத்தில் விபத்தில் சிக்கி பலியான வட மாநில தொழிலாளி ஒருவரது சடலம் இந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வந்தது. கேட்பதற்கு ஆள் இல்லாத அந்த வாலிபரின் சடலம் ஆதரவாற்றோர் 'லிஸ்ட்'ல் சேர்க்கப்பட சுமார் இருபது நாட்களாக அந்த சடலம் உடற்கூறாய்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. 

எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வைக்கப்பட்ட காரணத்தால் அந்த சடலம் அழுகி, புழு ஊறும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆதரவற்றவர்களை மரணத்திற்குப் பின்னும் கொடுமைப்படுத்தும் காட்சிகள் உடலை கூச வைத்தது.

குழந்தைகள் நலம்

சடலங்கள் இப்படி அழுகிய நிலையில் விடப்பட, இந்த பிணவறையின் அருகிலேயே குழந்தைகள் நலப் பிரிவும் செயல்படுகிறது. இதனால், பிஞ்சுக் குழந்தைகளும் நச்சுக் காற்றினால் பாதிக்கப்படுவதற்கான அபாயம் மேலும் அதிகமாகிறது. நோய்க்கு சிகிச்சை பெறவே ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர். 

ஆனால், அவர்கள் மீது துளியளவும் அக்கறையின்றி சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும் மருத்துவமனை நிர்வாகமும், அரசும் அவரவர் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், லட்சக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதே பொள்ளாச்சி மக்களின் ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...