கோவையில் அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு

கோவை மாநகரில், அகில இந்திய ஜீரண மண்டல அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் மாநாட்டில் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, கோவை ஜெம் மருத்துவமனை அக்டோபர் 6ம் தேதி  முதல் 9ம் வரை கொடிசியா வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. கோவையில் இம்மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். இம்மாநாட்டில் 1500க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அறுவை சிகிச்சை மருத்துவர்கள்  பங்கேற்கவுள்ளனர். 




இம்மாநாட்டில், அக்டோபர் 6ம் தேதி முதல் நாளன்று, அறுவை சிகிச்சை ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்ட  உள்ளது. இதில், உணவுக்குழாய், இறப்பை, பெருங்குடல், மலக்குடல், கணையம், கல்லீரல் ஆகியவற்றின் வரும் புற்றுநோய்களை லேப்பிரோஸ்கோப்பிக்  மற்றும் வழக்கமான அறுவை சிகிச்சை மூலமாக செய்து காண்பிக்க உள்ளனர். இந்த ஒளிபரப்பினை 4K மற்றும் 3D மூலம்  ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 4K ஒளிபரப்பானது ஜீரண மண்டல உறுப்புகளை  மிக துல்லியமாக  காட்டக்கூடியது. மற்றும் அறுவை சிகிச்சைக்கு எளிதாக பயன்படக்கூடியது. இந்தியாவில் முதல்முறையாக அறுவை சிகிச்சை மற்றும் நேரடி ஒளிபரப்பு இம்மாநாட்டில் காண்பிக்கப்பட்ட உள்ளது. 


அக்டோபர் 7ம் தேதி இரண்டாம் நாளாக, தொடர்ச்சியான மருத்துவ கல்வி (CME) என்ற தலைப்பில் சர்ச்சைகள், சிக்கல்கள் மற்றும் ஒருமித்த கருத்தாக நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில் பல்வேறு ஜீரண மண்டல சிகிச்சைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. டாக்டர்.சி.பழனிவேலு தமையில் கணையம் பற்றிய லேப்பிரோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை முறையில் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி, ஜெர்மன், கொரிய, ஜப்பான் மற்றும் பல் நாடுகளில் இருந்து 35 பேராசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். 


அக்டோபர் 8ம் தேதி மூன்றாம் நாளன்று, உலக புகழ்பெற்ற சர்வதேச மற்றும் இந்திய ஜீரண மண்டல நிபுணர்களின் சிகிச்சை பற்றிய கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக்  கல்லீரல் அறுவை சிகிச்சைக்கான இரண்டாவது ஆசியா பசிபிக் நிபுணர் குழுவின் மனசு நடைபெறவுள்ளது. இதில், சீனா, கொரிய, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த கல்லீரல் அறுவை சிகிச்சை துறையில் சிறந்து விளங்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு நடப்பது இம்மாநாட்டில் முதல்முறையாகும். SSAT  முதல்முறையாக இம்மாநாட்டில் பங்கேற்கிறது. 


அக்டோபர் 9ம் தேதி இறுதி நாளன்று, நடக்கும் மாநாட்டில் இத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மருத்துவ பேராசிரியர்கள் தங்கள் மருத்துவ பயணத்தை எடுத்துரைக்கவுள்ளனர். இம்மாநாட்டியில் பயன்பெறும் வகையில் பல்வேறு செயல்முறை அறுவை சிகிச்சை கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. லேப்பிரோஸ்கோப்பிக் கணைய அறுவை சிகிக்சை பற்றி பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஜெம் மருத்துவமனையின் மருத்துவமனையின் முதன்மை மருத்துவரான டாக்டர்.சி.பழனிவேலு  மற்றும் மருத்துவகுழுக்கள் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற உள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...