புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்


கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு, புரட்சிகர மாணவர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் "தேசிய கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான உள்ளீடுகள்" என்ற தலைப்பில் கடந்த  ஜூன் மாதம் தனது இணையதளத்தில் ஆவணம் ஒன்றை வெளியிட்டது.



இந்த புதிய கல்விமுறை தாய்வழிக்கல்வியை பாதிக்கும் என்றும், சமஸ்கிருதத்தை மத்திய அரசு திணிப்பதாகவும் கூறி புரட்சிகர மாணவர் முன்னணியினர், கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட மொத்தம் 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் பேசியதாவது:- 

சமஸ்கிருத மொழியை வெறும் 11 ஆயிரம் பேர் மட்டுமே பேசுகின்றனர். ஆனால் மத்திய அரசு அதை படிக்க வலியுறுத்தி வருகிறது. இதனால் தாய் மொழி தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையால் உயர்கல்வித்துறை கார்ப்பரேட் மயமாக்கப்படும் அபாயமும் உள்ளது. "எங்களுக்கு தாய் மொழிக் கல்வியே போதும்" இக்கல்வி முறை எங்களுக்கு வேண்டாம். எங்களுக்கு தாய் மொழிக்கல்வியே போதும் என இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...