மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை


ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சையில் சாதனை படைத்து வருகிறது. உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் மார்பக புற்று நோய் பற்றிய புதிய கருவி வெளியிடப்பட்டது.

புற்றுநோய்மையத்தின்இயக்குனரும், தலைமைமருத்துவருமானமருத்துவர்குகன்இந்தகருவியைபற்றிக்கூறுகையில்:

ஆண்டு தோறும் பிங்க் மாதம் என்று அழைக்கப்படும் அக்டோபர் மாதத்தில் உலக மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்று நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றது. இதுவரை மக்களிடையே 12000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த 13 ஆண்டுகளாக, மார்பகம் பற்றிய விழிப்புணர்வு கையேடு, இலவச மேமோகிராம், குறும்படம் வெளியிடுதல்,  போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.



தற்போது, இந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கும் இன்று ஒரு புதிய சாதனையாக மார்பக புற்று நோய் பற்றிய பொதுமக்கள் அனைவரும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி, ஒரு பிங்க் நிறமான 8 ஜி.பி திறன் கொண்ட சிலிக்கான் யு.எஸ்.பி கைப்பட்டை ஆகும்.இது வளையல் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது மார்பக புற்று நோய்  பற்றிய அதிவேகமான தெளிய இணையதள இணைப்பு, கைபேசி, அலைபேசியில், எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய மொபைல் அப்பிளிக்கேஷன் இணைப்பு, பார்க்க புற்று நோய் பற்றிய வீடியோ, ஆரம்ப நிலையில் மார்பக கட்டிகளை பரிசோதனை செய்தல் மற்றும் ஆரம்ப நிலையில் மார்பக புற்று நோய்களை கண்டறிதல் முக்கியத்துவம் வலியுறுத்தும் குறும்படம், இணையவழி புத்தகம் என்னும் மார்பக புற்று நோய்  பற்றிய தாவல் திரட்டு. 

இந்த கைப்பட்டையை இலவசமாக மகளிர் சுயஉதவிக்குழு, மகளிர் மன்றங்கள், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், கிராமப்புற மகளிர் மன்றங்கள், மகளிர் கல்லூரி ஆகிய அமைப்புகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதோடு, வழக்கம்போல் இம்மாதம் இலவச மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மேமோகிராம் போன்ற பரிசோதனை நடக்கும். புற்று நோயை முறியடிப்போம் என்றார். 

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...