மாற்றுத் திறனாளிகளுக்கான வாகன சேவை மற்றும் 2017-ம் வருட சிறப்புக் காலண்டர் அறிமுக விழா

கோவை, ஸ்வர்கா பவுண்டேஷன் என்ற அரசு சாரா அமைப்பின் சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சாரதி என்ற வாகனத்தின் துவக்க விழாவும் மாற்றுத் திறன் சாதனையாளர்கள் இடம்பெற்றுள்ள 2017-ம் ஆண்டுக்கான “ஐயம் ஸ்பெஷல்” என்ற பிரத்யேக காலண்டர் அறிமுக விழாவும் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் இன்று நடைபெற்றது.



ஸ்வர்கா பவுண்டேஷன் என்ற அறக்கட்டளை அக்டோபர் 2014-ல் துவக்கப்பட்டது. பலரது வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே ஸ்வர்கா பவுண்டேஷனின் நோக்கமாகும். குறிப்பாக நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து போவோருக்கு தேவையான நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளிக்கிறது. மேலும் அதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. மல்டிபிள் ஸ்களிரோசிஸ் மற்றும் இதர நரம்பு தொடர்பான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மறுவாழ்வுக்கான உதவிகள் அளித்தல், ஊக்கமும் உற்சாகமும் அளித்தல், சமூகத்தில் அவர்களுக்குன்¢ய இடம் கிடைக்கச் செய்தல், நோயாளிகள், அவர்களைக் கவனித்துக் கொள்வோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குதல் ஆகிய பணிகளை ஸ்வர்கா பவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது.

“ஐயம் ஸ்பெஷல்” 2017 காலண்டர் வெளியீடு:

இந்த காலண்டர் இரண்டவது ஆண்டாக வெற்றிகரமாக வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் சோதனைகளைக் கடந்து சாதனைகள் புரிந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நரம்புக் கோளாறால் பாதிக்கப்பட்ட 12 மாற்றுத் திறனாளிகளைப் (6 ஆண்கள் 6 பெண்கள்) பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளது, சுவற்றில் மாட்டிக் கொள்வது மற்றும் மேஜை மீது வைத்துக்கொள்வது ஆகிய இரு வடிவங்களில் இக்காலண்டர் வெளியிடப்படுகிறது. இதில் நிறுவனங்கள் தங்களது நிறுவன சின்னங்களை இடம்பெறச் செய்வதற்கான வசதியும் உள்ளது, இதில் உள்ள புகைப்படங்கள் சர்வதேச புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டவை. இந்த காலண்டரை கருத்துருவாக்கி வடிவமைத்ததும் ஒரு மாற்றுத்திறனாளிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதை வீடியோ படமாக எடுத்து அதை ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும் திட்டமுள்ளது. காலண்டர்கள் விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி தற்போது நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்.



மாற்றுத் திறனாளிகளுக்கான சாரதி வாகனம்:

சாரதி என்பது நரம்பு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டாடா விங்கர் வேன் ஆகும். இதில் ஒரு சோபா பெட், மூன்று சீட்டுகள் மற்றும் கழிவறை வசதி உள்ளது. நோயாளிகள் வாகனத்தில் சிரமப்படாமல் ஏறி இறங்க மடக்கு வீல்சேர் மற்றும் ரேம்ப் வசதியும் உள்ளது அதிக பட்சம் 6 நபர்கள் இதில் பயணிக்கலாம். மல்டிபில் ஸ்களிரோசிஸ் மற்றும் இதர நரம்பு நோய்களால் பாதிக்கப்பட்டோர் தங்களது இயற்கை உபாதைகளைக் கட்டுப்படுத்துவது கடினம். இவர்களுக்கான கழிவறையுடன் கூடிய வாகன வசதி இதுவரை இல்லை. சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவாக உள்ள வயது முதிர்ந்தோறும் சாரதி வாகன வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம், சாரதி தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும். இதைப் பயன்படுத்த விரும்புவோர் ஸ்வர்காவில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. வருமான சான்று மற்றும் வறுமை நிலை குறித்த சான்றளித்தால் பயணக் கட்டணம் அதற்கேற்ப குறைக்கப்படும். சாரதி வாகன வசதி இன்னும் இரண்டு வாரங்களில் அமலுக்கு வரும்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர்லட்சுமி ராமகிருஷ்ணன், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் அறங்காவலர்டாக்டர் கிருஷ்ணகுமார் மற்றும் பலர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.









Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...