கேரளாவில் முழு அடைப்பு - தமிழக வாகனங்கள் நிறுத்தம்

கேரள மாநிலம் கண்ணூரில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்ணூர் மாவட்டம் பிணராயி பகுதியை சேர்ந்த ரமீத்(19) என்ற பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் நேற்று காலை ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் விசாரணை துவங்கியுள்ளது. இந்த நிலையில், ரமீத்தை கொலை செய்தது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், முன் விரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் கேரளாவில் முழு அடைப்புக்கு அம்மாநில பாஜக அழைப்பு விடுத்துள்ளது. இதையொட்டி வாகனங்கள் இயங்காது எனவும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மருத்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை மட்டும் நடைபெற்று வருகிறது.

இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் களியக்காவிளையில் நிறுத்தப்படுகின்றன. முழுஅடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் தனியார் வாகனங்களும் இரு மாநில எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளாவிற்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துக்கள் இன்று இயக்கப்பட வில்லை உக்கடம் பேருந்து நிலையம் வெறுச்சோடி காணப்பட்டது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...