பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தகர்க்க முயன்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர்: பாகிஸ்தானில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு நிறுவனத்தை தகர்க்க பதுங்கியிருந்த அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முல்தான் மாவட்டம். இங்குள்ள சுஜாபாத் பகுதியில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு அமைப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான சிலர் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலில் இறந்தவர்கள் தடை செய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் தெஹ்ரி இ தலிபான் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...