காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம்: இந்திய நிலைகள் மீது பாக். ராணுவம் குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் மீது கடந்த மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் சர்ஜிக்கல் அட்டாக் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தனர். 

இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில்  இந்த சூழலில் உரி தாக்குதலுக்கு பின்னர் தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளை குறிவைத்து கடந்த மாதம் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் 20ம் தேதியும் 28ம் தேதியும் பூஞ்ச் பகுதியில் அத்துமீறி இந்திய நிலைகளை நோக்கி சிறிய ரக குண்டுகளை வீசி தாக்கினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. மேலும் அக்னூர் மாவட்டத்தில் உள்ள பல்லன்வாலா, சப்ரியர், சம்னம் ஆகிய பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும் இந்திய நிலைகள் மீது பாக். படைகள் தாக்குதல் நடத்தின. 

அதே போல் இந்த மாத தொடக்கத்தில் பூஞ்ச் மாவட்டத்திலும் இந்திய நிலைகள் மீதும், எல்லையோர கிராம குடியிருப்புகளை நோக்கியும் தாக்கினர். இந்த மாத தொடக்கத்தில் 10 நாட்களில் மட்டும் 25 முறை பாக். ராணுவம் அத்துமீறி தாக்கியுள்ளது. இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வரும் வேளையில், இன்று அதிகாலை ஜம்மு எல்லையில் உள்ள நவுசரா செக்டாரில் நான்கு இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தினர் மோட்டார் ரக குண்டுகளை பயன்படுத்தி தாக்கினர். இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் இந்திய தரப்பில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...