நண்பரை சுட்டுக் கொன்ற சவுதிஅரேபிய இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் அதெல் அல் மகிமித். இவரும் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.

கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்  இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த இளவரசர் கபிர் தனது நண்பர்  மகிமித்தை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் அதே இடத்தில் பலியானார்.
மேலும் ஒருவர்  காயம் அடைந்தார்.  இச்சம்பவம் 2012-ம்  ஆண்டு டிசம்பரில் நடந்தது.

இந்த வழக்கு ரியாத் கோர்ட்டில்  நடந்தது. 2014-ம் ஆண்டில் இக் கொலை  வழக்கில் இளவரசர் கபிருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து  நேற்று அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவரை தொடர்ந்து இந்த ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் கபிர் 134-வது நபர் ஆவார். குறிப்பாக  சவுதி அரச குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படு வது மிகவும் அபூர்வமாகும். 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...