ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ. 14.65 லட்சம் திருட்டு: ஊழியர்கள் இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் சிறுகச் சிறுக ரூ. 14.65 லட்சத்தை திருடிச் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, தாமரை நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 9-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32). இவர், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஊழியர்களின் துணையுடன் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பி வந்தார். இந்நிலையில், ஆறுமுகத்திடம் பணிபுரியும் ஊழியர்கள் பணம் நிரம்பும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் குறைவாக இருப்பதாக அந்தந்த வங்கி மேலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

 இதையடுத்து திருவண்ணாமலை, களம்பூர், சேத்பட், கேட்டவரம்பாளையம், படவேடு, சந்தவாசல், பெரியகொழப்பலூர், துரிஞ்சாபுரம் பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இண்டிகேஷ் ஏடிஎம் மையங்களில் கடந்த சில மாதங்களாக நிரப்பப்பட்ட தொகையை வங்கி அதிகாரிகளுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் குறைவாக நிரப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனது நிறுவனத்தில் பணிபுரியும் சேத்துப்பட்டை அடுத்த கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (25), டில்லிபாபு (24) ஆகியோர் மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இருவர் மீதும் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து, வேலு, டில்லிபாபு ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்கனர்.

விசாரணையில், இருவரும் சேர்ந்து அவ்வப்போது சிறுகச் சிறுக மொத்தம் ரூ.14.65 லட்சத்தை திருடியது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டதை ஊழியர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனராம். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும்போதே குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை பணத்தை திருடினார்களாம்.

இதுதவிர, தங்களின் ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் காவலாளி இல்லாத ஏடிஎம் இயந்திரங்களுக்கு இருவரும் செல்வார்களாம். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பகுதியின் ரகசிய எண்ணை பயன்படுத்தி பணப்பெட்டியை திறப்பார்களாம். பின்னர், அதில் இருந்து தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் இயந்திரத்தை லாவகமாக பூட்டிவிட்டுச் செல்வார்களாம்.

இவ்வாறாக கடந்த 2 மாதங்களில் மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்தை இருவரும் சேர்ந்து திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இதுவரை இவர்கள் திருடிய பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...