இரண்டாம் முறையாக பி.சி.ராய் விருது பெறும் ஜெம் முதன்மை மருத்துவர்


கோவை ஜெம் மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர் சி.பழனிவேலு, மிகச் சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக டாக்டர் பி.சி.ராய் விருதைப் பெறவுள்ளார்.

மருத்துவத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் டாக்டர் பி.சி.ராய் விருது மிகவும் உயர்ந்ததாகும். இந்திய அரசாங்கம் டாக்டர் பி.சி.ராய் பெயரில் தேசிய மானியக் குழுவை அமைத்துள்ளது. இது மருத்துவத்துறையில் பல பிரிவுகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி வழங்கப்படும் விருதாகும்.

இந்திய ஜனாதிபதி இவர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.1 லட்சம் நிதியாக வழங்கி கௌரவிப்பார்.

2006 ஆம் ஆண்டில் டாக்டர் சி.பழனிவேலு லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மற்றும் ஜீரண மண்டல சிறப்பு சிகிச்சை பிரிவிற்காக டாக்டர் பி.சி.ராய் விருதை பெற்றார்.

2015 ஆம் ஆண்டிற்கான மிகச் சிறந்த மதிக்கத்தக்க டாக்டர் பி.சி.ராய் விருதை சிறந்த மருத்துவர் என்ற பிரிவில் இரண்டாவது முறையாக தற்போது பெறுகிறார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...