அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்த கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி

கோவை மாநகரில் அனைத்து உடல்நல சிகிச்சை தேவைகளுக்கும் ஒரே புகழிடமாகத் திகழும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஹைதராபாத்தைச் சார்ந்த அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு 2017ம் ஆண்டு ஜூலையில் முழுமையாக இயங்கச் செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் இக்குழுமங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட், செயல் இயக்குநரும் மற்றும் கூட்டு நிறுவனருமான ஜோசப் ஏ.நிக்கோலஸ் கூறியதாவது:- 

அமெரிக்கன் ஆன்காலஜி இன்ஸ்டியூட் என்பது மேற்கத்திய தரக்கட்டுப்பாடுகளை சார்ந்து முழுமையான உயர்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சை வழங்கும் நிறுவனமாகும். இதன் முதல் மையத்தை தமிழகத்தில் கோவை மாவட்ட ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெறுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவனத் தலைவரும், நரம்பு மற்றும் தண்டுவட அறுவைசிகிச்சை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் கே.மாதேஸ்வரன் கூறியதாவது:- 

''சமூக ஊடகம் மற்றும் இணையதள வசதி எளிதாக கிடைக்கும் நிலையில் மக்கள் இப்போது உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று விரும்புகிறார்கள். எங்களுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை பிரிவு, அமெரிக்க புற்றுநோயியல் நிலையத்துடன் இணைந்து எங்களுடைய சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் உலகிலுள்ள தலைசிறந்த புற்றுநோய் மருத்துவ வல்லுநர்களைக் கொண்டு மருத்துவ நடவடிக்கைகளை தொடங்கவுள்ளது'' என்றார்.

ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிறுவன தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் ஆலோசனையில் உருவான இத்திட்டம், இக்குழுமத்தை அங்கம் வகிக்கும் பிரசிதிபெற்ற மருத்துவ புற்றுநோயியல் வல்லுநர் டாக்டர் சுதாகர் நடராஜன் மற்றும் அமெரிக்க ஆன்காலஜி இன்ஷ்டியூட் மருத்துவ புற்றுநோயியல் இயக்குநர் தலைமையில் சிகிச்சை ரீதியாக நடத்தப்படும்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...