தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட்கள் முகாம்: தேடுதல் வேட்டையில் தமிழக அதிரடிப்படை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் மாவோயிஸ்ட்களின் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான மஞ்சூர், கெத்தை, கிண்டகொரை மற்றும் அப்பர்பவாணி உள்ளிட்ட இடங்களில் கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் ஊடுருவி இருப்பதாக கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் இவர்களின் நடமாட்டத்தை கண்டறியப்பட்டுள்ளதால் மாநில காவல் துறையினர் அவர்களை தேடும் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்ட்களின் தலைவர் விக்கரமகவுடா மற்றும் சோமன்பத்மநாபன் உட்பட 32 பேரின் புகைப்படங்களை பேனர்களாக கட்டி பொதுமக்களின் பார்வைக்காக காவல்துறையினர் வைத்துள்ளனர்.

மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் மலைவாழ் மக்கள் மற்றும் மலை கிராமங்களில் வசிப்பவர்களிடம் புதியவர்கள் நடமாட்டம் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் ஒட்டியுள்ள மாவோயிஸ்ட்களின் புகைப்படங்களில் 12 பெண்களும் இடம் பெற்றுள்ளனர். கேரள மாநிலம் பாலக்காட்டை ஒட்டிய அப்பர்பவாணி மற்றும் கின்டகொரை, கெத்தை, முல்லை உள்ளிட்ட இடங்களில் தமிழக அதிரடி படையினர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல வேட்டை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...