மாயமான மலேசிய விமானம் விமானியால் மூழ்கடிக்கப்பட்டதா? விமான பாகங்கள் ஆய்வில் பகீர்

சிட்னி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி, 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் மாயமானது. இதை தேடி ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனாலும் விமானத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில், தான்சானியா அருகே மலேசிய விமானத்தின் இறக்கை மீட்கப்பட்டது. மேலும் 20 சிறிய பாகங்கள் ஆப்ரிக்க கடலோர பகுதிகளில் மீட்கப்பட்டன. இவற்றில் 3 மட்டுமே மலேசிய விமானத்தின் பாகங்கள். இவற்றின் மூலம் முக்கிய தகவல் கிடைக்குமா என ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்புத்துறை ஆய்வு மேற்கொண்டது. 

விமான இறக்கையில் உள்ள பிளாப் தகடுகளை ஆய்வு செய்தபோது, அவை விமானம் தரையிறங்கும்போது இருக்கும் நிலையில் இல்லை என்பது தெரியவந்தது. செயற்கைக்கோளுடன் விமானத்துக்கு இருந்த கடைசி தகவல் தொடர்பை ஆராய்ந்த போதும், மிக உயரமான நிலையில் இருந்து வேகமாக கீழே இறங்கியது  தெரியவந்துள்ளது. இதனால் விமானம் கட்டுப்பாடின்றி திடீரென வேகமாக தரையிறங்கி கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால், மலேசியா விமானம் அதன் விமானியாலேயே வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை நிபுணர்கள் எழுப்பியுள்ளனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...