பெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்

வாஷிங்டன்: நமக்கு நல்ல அதிபர் வர வேண்டும். பெண்களை பன்றிகள் என்று சொல்பவர் அல்ல என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா டிரம்ப் பற்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெம்பியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஹில்லாரி கிளிண்டன் கூறுகையில், டிரம்ப் அதிபராகிவிட்டார் என்று கற்பனை செய்யுங்கள். அவர் அதிபராகி உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ட்விட்டர் போருக்கு பதிலாக உண்மையான போரையே துவங்குவார் என்றார்.

டிரம்ப் பெண்களை அவமதிப்பவர் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஹில்லாரி. இந்நிலையில் வடக்கு கரோலினாவில் உள்ள ராலேவில் நடந்த பேரணியில் பேசிய ஒபாமா கூறுகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏமாற்றுபவர் அதிபர் மாளிகைக்கு வர தகுதியில்லாதவர். அமெரிக்கா மக்களை கொடுமைப்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்பவர் அதிபர் ஆகக் கூடாது.

பிரபலமாக இருக்கும் காரணத்தால் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு தப்பிப்பவரின் குரலை கேட்க விரும்புகிறீர்களா? பெண்களை பன்றிகள், நாய்கள் என்று யார் கூறுவார்கள்? அந்த குரல் அமெரிக்காவில் குரல் அல்ல. அமெரிக்காவுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஹில்லாரி. அவர் தான் அடுத்த அதிபராக வேண்டும். அவர் தான் சரியான நபர் என்றார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...