சாக்கடை நீர் எங்களுக்கு குடிநீரா.? குமுறும் 25 வது வார்டு களிங்க வீதி மக்கள்


அடர் கருப்பு நிறத்தில், மூச்சை திணற வைக்கும் விதமாக துர்நாற்றம் வீசும் வகையில் நீரை குடிக்க கொடுத்தால் நாம் என்ன செய்வோம்? இது தான் கோவை மாநகராட்சியில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு பகுதியில் உள்ளது கங்குவார் வீதி என்று அழைக்கப்படும் களிங்க வீதி. 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளன. இதில் முக்கியமானது குடிநீர் பிரச்சனை. 



6 அல்லது 8 நாட்களுக்கு ஒருமுறை இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சாக்கடை நீர் பாதையும், குடிநீர் குழாய் செல்லும் பாதையும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளதால் குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக களிங்கவீதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சாந்தி என்ற பெண் கூறியதாவது:- 



நான் கடந்த 30  ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறேன். ஒரு ஆண்டுக்கு முன்னர் பாதாள சாக்கடை திட்டத்திற்காக எங்கள் பகுதியில் குழி தோண்டி குழாய் அமைத்தனர். அன்று முதல் இன்று வரை எங்களுக்கு குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதிலும் கடந்த 6 மாதங்களாக குடிக்கமட்டுமின்றி கண்ணால் பார்ப்பதற்கே அருவருப்பான நிலையில் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து அடர் கருப்பு நிறத்தில் சாக்கடை நீர் போலவே வரும் இந்த நீரை எவ்வாறு நாங்கள் குடிப்பது? 

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தோம். அவர்கள் ஒருமுறை வந்து குடிநீர் வழித்தடத்தை மாற்றி கொடுத்தார்கள். ஆனால் குடிநீர் பிரச்சனை  தீர்ந்தபாடில்லை. பலமுறை அதிகாரிகளுக்கும், எங்கள் வார்டு கவுன்சிலர் ஜெயபால் என்கிற இலை ஜெயபாலு-விற்கும் புகார் அளித்தோம். கண்துடைப்பிற்கு வந்து பார்த்துவிட்டு செல்கின்றனரே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 2 தெரு தாண்டி சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அவர்களும் 3 குடம் நீருக்கு மேல் கொடுப்பதில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.



குழந்தைகளும், கர்பிணிகளும், வயதானவர்களும் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி, கழிவுநீர் தேங்கி நிற்கும் பிரச்சனைகளும் உள்ளது. இதனால், இங்கு வாழும் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து 25-வது வார்டு உறுப்பினர் ஜெயபால் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- 

பிள்ளையார் தெரு மற்றும் களிங்கவீதியில் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தற்போது பிள்ளையார் தெருவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, களிங்கவீதியிலும் புதிய நீர் குழாய் அமைக்கப்படும். அதோடு, களிங்கவீதியில் சாக்கடை அடைப்பிற்கு 24 வது வார்டு பகுதியில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே காரணம். இது குறித்து அந்த வார்டு உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளோம். விரைவில் பிரச்சனைகள் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மாநகரத்தில் ஏற்பட்டுள்ள இது போன்ற, சுகாதார சீர்கேடுகளை விரைவில் ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போது தான் கோவை உண்மையான ஸ்மார்ட் சிட்டி என்ற அந்தஸ்த்தை பெரும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு இடத்தில் பிரச்சனை வரும்போது அதை சரிபடுத்த நடவடிக்கை எடுக்காமல், அடுத்தவர்களிடம் அந்த பிரச்சனைகளை ஒப்படைக்கும் செயலை தவிர்த்து அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை யோசித்து, செயல்படுத்தினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...