2500 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கோவையில் கண்டுபிடிப்பு!


25 ஆண்டுகளுக்கு முன்னர் நம்மிடம் இருந்து தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைத்தாலே மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிடுவோம் நாம். அவ்வாறு, 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கும் போது மகிழ்ச்சி மட்டுமில்லை அது ஒரு நெகிழ்ச்சியான தருணம் கூட.

 

இந்த முதுமக்கள் பொருட்களை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியின் கல்வெட்டியல் பட்டயப்படிப்பு மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் குறித்து அக்கல்லூரியின் தமிழ் பேராசிரியரும், கல்வெட்டியல் பட்டயபடிப்பின் பொறுப்பாசிரியருமான ரவி நம்மிடம் கூறியதாவது :-



தமிழகத்தில் 4 இடங்களில் இந்த படிப்பு உள்ளது. அதில் ஒன்று பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி. வருடந்தோறும், பல்வேறு மாணவர்கள் இந்த படிப்பில் ஆர்வத்துடன் இணைந்து வருகின்றனர்.

வரலாறு முக்கியம்

நாம்  அனைவருக்கும் வரலாறு என்பது மிக முக்கியமான ஒன்று. நமது பண்பாடு, கலாச்சாரம். நாகரீகம், வாழ்க்கை முறை போன்ற அனைத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும்.  அப்போதுதான் இதை அழியாமல் பாதுகாக்க முடியும். இந்த வரலாற்றயும், அது விட்டு சென்ற நினைவுச் சின்னங்களையும் தான் நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.

பழங்கால கல்வெட்டுகள் மற்றும் முதுமக்கள் உபயோகப்படுத்திய பொருட்கள் குறித்து எங்கள் மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று அங்கு கிடைக்கும் வரலாற்று சின்னங்களை சேகரித்து வருகின்றனர். எங்கள் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பதால் எங்களால் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது.

முதுமக்கள் பொருட்கள்

கோவையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டோம். அதில், காளப்பட்டி, பேரூர், வெள்ளலூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதுமக்கள் பயன்படுத்திய தாளி, மண்பாண்டங்கள், காய்கறிகளை பதப்படுத்த தயாரிக்கபட்ட குடுவைகள், சுடுமண் காதணிகள், எடை கற்கள், குறியீடுகள் பொறித்த மட்கலங்கள்   போன்ற பல்வேறு பொருட்களை கண்டெடுத்தோம். தொடர்ந்து, எங்கள் பணிகளை செய்து கொண்டிருக்கும் போது பெரிய தடாகம் பகுதியில் முதுமக்கள் பயன்படுத்திய பொருட்கள் பல கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. நான் எங்கள் கல்லூரி மாணவர்களுடன் அங்கு சென்று ஆய்வு நடத்திய  போது, அங்கு தமிழ் பிராமி எழுத்துக்கள் இடம் பெற்றிருந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய தாங்கி ஒன்று கிடைத்தது. இது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தினர். இத்தனை ஆண்டுகள் பழையதானாலும், அதன் மினுமினுப்பும் பளபளப்பும், சற்றும் குறையாமல் உள்ளது. இது நம் முன்னோர்களின் விஞ்ஞானத்தை காட்டுகிறது. அதில் இடம் பெற்றிருந்த தமிழ் எழுத்துக்கள் குறித்து பல்வேறு தொல்லியலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.



தவன் சாத்தன்

எங்களது கூற்றுப்படி அதில் ‘தவன் சாத்தன்’ என்று எழுதப்பட்டுள்ளது. இது பவுத்த அல்லது சமண சமயத்தை சார்ந்த துறவியுடையது என்பது எங்கள் கணிப்பு. இந்த தாங்கியை கொண்டு, கடவுளுக்கு பூஜிக்கும் பணியினை அவர் செய்திருக்கலாம். பெரிய தடாகம் பகுதி ஊற்றுக்களையும், நீர் நிலைகளையும் அதிகமாய் பெற்றிருந்ததால் அங்கு கோவை மக்கள் நன்கு வளர்ச்சியடைந்த நாகரீகத்தோடு வாழ்ந்துள்ளனர் என்பது புலப்படுகிறது. 25௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் சிற்ப வேலைப்பாடுகளிலும், மொழியிலும், நாகரீகத்திலும் அனுபவம் பெற்று வாழ்ந்துள்ளனர்.



அழிக்கப்பட்ட பொக்கிஷங்கள்

தடாகம் பகுதியில் இன்னும் எண்ணற்ற வரலாற்று சின்னங்கள் இருந்துள்ளன. அங்கு செங்கல் சூளைகள் அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள், அவற்றை அழித்து செங்கற்களாக மாற்றிவிட்டனர். அழிவின் விளிம்பில் இருந்த இந்த தாங்கியை நாங்கள் மீட்டெடுத்து வந்ததால் இது வெளிவந்துள்ளது. தொடர்ந்து, அங்கு கிடைக்கும் பொருட்களை சேகரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






செங்கல் சூளைகள்

தடாகம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. முதுமக்கள் வாழ்ந்ததாக கூறப்படும் இந்த பகுதிகளில் இன்னும் ஏராளமான வரலாற்று சின்னங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செங்கல் சூளைகாளால் நாம் பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய தொழிநுட்பம் வாய்ந்த வரலாற்று சின்னங்கள் அழிந்து செங்கற்களாக மாறிவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

செம்மண் எடுக்க அரசு நிர்ணயித்த அளவை விட தனியார் செங்கல் சூளைகள் அதிக மண் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதானால், வரலாற்று சின்னங்கள் அழிக்கப்படுவது மட்டுமின்றி, கனிம வளங்களும் தனியாருக்கு தரை வார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஊடகங்கள் பலமுறை செய்தி வெளியிட்டும் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் தாமதம் காட்டி வருகின்றனர்.  இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு, நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், கோவையில் நடக்கும் செம்மண் கொள்ளையை தடுக்கலாம் அதோடு, நமது வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கலாம் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...