பேரூர் குளக்கரையில் ஆக்கிரமிப்பா? அதிகாரிகள் விசாரணை


கோவை மாவட்டத்தில் 28 குளங்கள் உள்ளன. அதில் 10 குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. மீதம் உள்ளவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.  அதில் ஒன்று பேரூர் குளம். நொய்யல் நதிக்கரையை அடுத்த  புட்டு விக்கி பாலத்தின் அருகே அமைந்துள்ளது இந்த பேரூர் குளம்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 குடும்பங்கள் குளத்தின் கரைப்பகுதியில் கூடாரம் அமைத்து குடிபுகுந்துள்ளனர். 



மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாமில் குழாய் பதிக்கும் பணிக்காக கோவை வந்ததாகவும், ஒரு மாத காலத்தில் ஆந்திராவுக்கு திரும்ப இருப்பதாகவும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரி ஒருவர்  கூறுகையில், 'ஆந்திர மக்கள் பேரூர் குளக்கரையில் கூடாரம் அமைத்திருப்பது தொடர்பான விவரம் எங்களுக்கு தெரியவில்லை. தற்காலிக பணி நிமித்தமாக அந்த மக்கள் குளக்கரையில் குடிபுகுந்திருக்கலம். உடனடியாக இது குறித்து விசாரணை நடத்துகிறோம். அவ்வாறு அவர்கள் இராணுவ பணி காரணமாக அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து  அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்' என்றார். 



மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள குளம் நிரம்பும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குளத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பது சிறந்தது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...